Saturday, 16 March 2019

காஞ்சிவரம்

காஞ்சிவரம் 


"மனிஷ்"ற்கு தமிழ்நாடே புதுசு  அவனுடைய மிக சிறுவயதில்  அதுவும் அவனது ஆறாவது வயதில் "அண்ணா நகர்" வந்துள்ளான். இப்போது அவனது நினைவில் நிழல் அளவு கூட அவை நினைவில் இல்லை.

காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு விமானத்தில் வந்துகொண்டு இருக்கிறான்!  அங்கு ஒரு எந்திரத்தை பழுது பார்க்கும் வேலை. வரும் வியாழன் , வெள்ளி இறுதினங்கள் இங்கு தான் இருக்கபோகிறான்.

விமானம் காலை 9.00 மணி அளவிற்கு சென்னை  வந்து இறங்கியது. விமானச்செலவு, அங்கிருந்து டாக்ஸி ,தங்குமிடம், உணவு , இவை அனைத்தும் அந்நிறுவனத்தின் பொறுப்பு. எனவே கொளுத்தும் வெயிலிலும் குளு குளு வென்றே இருந்தான்.

மனிஷ் மும்பையிலேயே பிறந்து வளர்ந்தவன், மராத்தி அவனது தாய்மொழி,இந்தி நன்றாராக பேசுவான், மற்றபடி ஆங்கிலம் முதற்கொண்டு தகராறுதான். வேலையில் கெட்டிக்காரன். 

பத்துமணிவாக்கில் அந்நிறுவனம் வந்து சேர்ந்தான் , சில நிமிடங்கள் அறிமுகப்படுத்திக்கொண்டு பணியை தொடங்கினான் மதியமே கணித்துவிட்டான் இரண்டுநாட்களில் முடிகின்ற வேலை இல்ல இது என்று ! தனது டெல்லி தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து மேலும் சிலதினங்கள் கேட்டுப்பெற்றான். வரும் புதன் கிழமை காலை மீண்டும் மும்பைக்கு பறந்துவிட உத்தேசித்தான்.

அன்றையதினம் ஆட்பற்றாக்குறை , மொழி பிரச்சனை என பல சிக்கல்களை சந்தித்து தனது ஓய்வறைக்கு திரும்பினான். உணவருந்திவிட்டு "அமிதாப்பச்சனின்" புதிய படத்தை பார்த்து விட தீர்மானித்தான்.

சற்று தூரம் கடந்து வந்து ஸ்டாண்டில் ஆட்டோ விசாரித்தான். "குணவேல்" நன்றாக ஹிந்தி பேசவே அவருடைய ஆட்டோவில் "பாபு" திரையரங்கம் புறப்பட்டான்.

இருவரும் நன்றாக பேசிக்கொண்டு சென்றனர், மனிஷ் குணா விற்கும் டிக்கெட் எடுத்து உடன் அழைத்து கூட்டிச்சென்றான்.

வரும் வழியிலும் நன்றாக நெடுநாள் நண்பர்கள் போல பேசிக்கொண்டு வந்தார்கள் அப்போது நள்ளிருளிலும் மின்னிய "கைலாசநாதர் கோவில்" அவனை அசத்தியது.

ஓய்வறைக்கு திரும்பியவுடன் குனவேலிடம் மொபைல் நம்பரை பெற்றுக்கொண்டு , பேசியதை விட இருநூறு ருபாய் அதிகம் கொடுத்த னுப்பினான் .

வெள்ளிக்கிழமையும் மிக மந்தமாகவே சென்றது, அதிக நேரம் செலவிட்டும் பலனளிக்கவில்லை. சனிக்கிழமை வேலை விறுவிறுப்பாக சென்றது , பல உதவியாளர்கள் ஒத்துழைக்க கிட்டத்தட்ட 90% பணி முடிந்தது , திங்கட்கிழமையே பறந்து விடலாம் என்று அவன் உள்ளம் குதூகலித்தது.

ஞாயிற்றுக் கிழமை பொறுமையாக எழுந்து , குளித்துவிட்டு ,நிதானமாக டிபன் சாப்பிட்டுவிட்டு, கிளம்பி ஆட்டோவிற்கு காத்திருந்தான் , "டொக் டொக்" சப்தத்துடன் குணவேல் ஆஜர் ஆனான்.

பெரும்கூட்டத்தில் நசுங்கி வரதராஜரை தரிசித்தான் , பிறகு அவனது அம்மாவின் கட்டளைப்படி சித்திரகுப்தர் கோவில், பிறகு ஷாப்பிங் தேடித்தேடி பட்டுப்புடவை , சட்டை என தனக்கும் , பெற்றோரிற்கும் வாங்கிவிட்டு. நல்ல ஹோட்டலில் சாப்பிட்டனர்.

ஆட்டோவில் இருந்த காஞ்சி முனிவரை பார்த்து யாரென்று கேட்க , குணா மெய்சிலிர்த்து அவரது பெருமைகளை கூறினான். உடனே ஸ்ரீமடம் செல்ல தீர்மானித்தான்.  சட்டென்று அன்று இரவு பார்த்த இடம் நினைவுவர , குனவேலிடம் கூறி புரியவைத்தான். 

இருவரும் வெய்யல் தாழ  "கைலாசநாதர் கோவிலை" அடைந்தனர் , அங்கிருந்து மடம் , இரவு சாப்பாடு , இரவுக்காட்சி சினிமா என முடிவெடுத்தனர்.

அந்த ஆலயம் மிகவும் பிடித்துபோனது மனிஷ்ற்கு , சொற்ப ஆட்கள் நடமாட்டமே இருந்ததால் மிக நிதானமாக ரசித்து ரசித்து பிரகாரத்தை சுற்றிச்சுற்றி படம் பிடித்தான். சிற்பங்கள் அவனை திக்குமுக்காட செய்தது ,குறிப்பாக மதில் மேல் அமர்ந்த குட்டி யானை சிற்பம் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

மூலவர் சுற்றுப்பாதையை  குனிந்து உள்சென்று , தவழ்ந்து வெளியேறியது அவனிற்கு பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. அர்ச்சகர் சரளமாக ஹிந்தி பேசியதால் அவரையும் சிறப்பாக கவனித்தான்.

மத்திய தொல்துறை கோவில் என்பதால் ஹிந்தியில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்புகளை படித்து அறிந்துக்கொண்டான். பிறகு நந்திச்சிலையும் அவனை கவர்ந்து இழுத்தது, நந்தியின் பின்புறத்ததில் ருந்து பல கோணங்களில் படம் பிடித்து மகிழ்ந்தான் , தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ்ந்தான்.

ஆவலுடன் குளத்தை காணச்சென்றான் , இரண்டுநாட்களுக்கு முன் பெய்த மழை சிறு குட்டையாக தேங்கி இருந்தது . ஏமார்ந்து போனான்.  அந்த குட்டையில் விசித்திரமாக ஏதோ தெரிய உற்று நோக்கினான். அதில் கிரீடம் , மீசையுடன் ஒரு உருவம் தெரிய பதறி நகர முயற்ச்சித்தான் , அதற்குள் அது பீச்சி அவன் மேலே அடித்தது.

அவன்கண்கள் தீச்சிவப்பானது , நடை , உடல் மொழி , பாவனை என சகலமும் மாறியது ! , அங்கிருந்து கோவிலை நோக்கி மிடுக்குடன் ஆவேசமாய் நடந்தான்.

பாழடைந்த சிற்பங்களைக் கண்டு நரநர வென்று பற்களை கடித்தான் , அங்கு வந்துக்கொண்டிருந்த ஒருவனை அலேக்காக தூக்கி "ஏனடா , இப்படி பாழ்செய்தீர்" என கர்ஜித்தான். அவனோ " ஏனுங்க , நா அசலூருங்க , விட்டுபோடுங்க என பலவாறு அலற ஆரமித்தான் , கூட்டம் கூடி மிரண்டு போய் பார்த்துக்கொண்டிருந்தது.

அவனை பொட்  என இறக்கி விட்டுவிட்டு , பிரகாரத்திற்குள் சென்றான்               " எங்கே வேதியர் குழு" என்று அதட்ட "நான் மட்டும் தான் இங்கே இருக்கேன்,நாழியாரது , நகருங்கோ, நடையச்சாத்தனும், நமசிவாயா காப்பாத்து..." என்று அவர் தலை தெறிக்க நழுவிட , அங்கிருந்த சுண்ணாம்பு கட்டியை எடுத்துக்கொண்டு வந்து சிதிலமடைந்த சிற்பத்தின் பகுதிகளை தத்ரூபமாய் வரைந்தான்.

பிறகு கல்வெட்டுகளை படித்துவிட்டு "விக்கிரமாதித்தா" என்று அலறினான், அப்போது அங்கு வந்த குணா மனிஷ்ஷை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

சற்று நேரத்திற்கு பிறகு நிமிர்ந்து அமர்ந்து தியானித்தான் , சாதாரணமாக நடந்து வந்து ஆட்டோவில் அமர்ந்தான். என்னங்க ஆச்சு , இப்போ எங்க போகலாம் என்று இந்தியில் தயக்கத்துடன் குணா கேட்க "செல் ! மாமல்லபுரம்" என்று கூறி  ராஜதோரணையில் சமிக்கை செய்தான்.

   "நீ மொதல்ல காச காட்டு , நா வரேன்"

   "வீரசிம்மன் கூறுகிறேன் , அங்கு வா பொற்காசுகளை வீசுகிறேன்"

    " நீ இங்க அடிச்ச கூத்து போதாத , என்ன ஆளவிடு , எறங்கு கீழ"


          " மன்னர் உத்தரவை மீறினால் சிரச்சேதம் , ஜாக்கிரதை"

இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்க , தூரத்தில் இருந்து ஒரு சித்த பிரமை பிடித்தவராய் தோற்றமளிக்கும் , கந்தல் ஆடை கிழவர் இவர்கள் அருகில் வந்து " மன்னர் மன்னா ! வந்தனம் ! இந்தாருங்கள் என்று இருபது புதிய  ஐநூறு ரூபாய் தாள்களை திணிக்க, அதை அப்பிடியே குண வேலிடம் குடுத்து "செல்"
என்றான்.

ராத்திரி ஆகிபோச்சு , பைத்தியங்களுக்கு இப்போ ரொம்ப முத்த ஆரமிக்குமே என்று குணா தமக்குள்ளே பதறிக்கொள்ள " சொற்ப காத தூரம் செல்ல ஏன் இவ்வளவு தாமதம்" என்று அதட்டிவிட்டு " எங்கே எங்களது ராஜபாட்டை ?" என்று கேட்டு விட்டு கண்களை மூடிக்கொண்டான்"

மனதிற்குள் குணா " என்ன விக்ரம் நடிச்ச படம் பேர்லாம் சொல்றான் , நமக்கு தெரியாம எதுனா கஞ்சா , டோபு , அபின்னு ஏதாவது அடிச்சுட்டானா !   என்னவோ மஹாபலிபுரத்துல இவன தள்ளிட்டு எஸ்கேப் ஆயிரணும்" என்று எண்ணிக்கொண்டே வேகமாக வண்டியை ஓட்டிவந்தான்.


கும்மிருட்டில் மஹாபலிபுரம் வந்து சேர்ந்தனர் , மனிஷ் பொறுமையாக ஆட்டோவைவிட்டு இறங்கினான் அங்குள்ள கடற்க்கரை கோவில் மற்றும் சில சிற்பத்தைக்கண்டு , களிப்பும் கோவமும் ஒன்றுசேர புன்னகைத்துவிட்டு, பெருநகைபுரிந்தான் பிறகு மயங்கி விழுந்தான்.

மறுநாள் காலை புகழ் பெற்ற பன்னாட்டு மருத்துவமனையில் கண்விழித்தான் , அவனிற்கு அன்று மாலைக்கு பிறகு நடந்தது நினைவில் இல்லை.

சில நாள் கழித்து குணா செய்திகள் பார்க்கையில்  " தொல்துறை ஆட்சியர் நடவடிக்கைகளில் மாற்றம் , அடிக்கடி தூயதமிழில் பேசுகிறார்..."  என்ற செய்தி அவனை உறைய வைத்தது.!







































2 comments: