Saturday, 20 July 2019

வினை



                                                    வினை

ஜே ஜே  வென கூட்டம் , ஜன நடமாட்டம் ... ஓயாத அறிவிப்புகள் !

 ஊர் வருவோர் , மீண்டும் செல்வோர் , திருமண கோஷ்டி , விளையாட்டு வீரர்கள் , கல்லூரி மாணவியர் , என பல்வேறு தரப்பட்ட  மக்கள்.             
பிரிவு, பரிவு , சோகம் , பிரியாவிடை , பட்டண  பிரவேசம் என பலதரப்பட்ட உணர்ச்சிகளுடன்  தாம்பரம் ரயில்நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது .

வெளியூரிலிருந்து சற்று தாமதமாய் வந்த ரயில் நிற்பதிற்கு முன்னே தடால் என குதித்தான் ஒருவன் பழைய ட்ரங்க்கு பெட்டியுடன் , நிலை தடுமாறி தடால் என விழுந்து எழுந்து வேட்டியை சரி செய்துகொண்டான்.

பழுப்பு நிற வேட்டி , பானையில் சுருட்டி வைத்த சட்டை , எண்ணெய்  சொட்டும் முகம் , ஏடாகூட நடை , பெட்டி வேறு ! "அனகாபுத்தூர் எப்புடிங்க போவணும்?" என்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் விறு விறு என வெளியேற முற்பட்டான் , அவனை டிக்கெட் பரிசோதகர் மடிக்கினார் !

 வேட்டி, சட்டபை , பெட்டி என எங்கு தேடியும் டிக்கெட் கிடைக்கவில்லை... சட் என ஒரு புதிய 50 ருபாய் தாளை நீட்டினான் ! அவ்வளவு தான் கடும் கோவத்துடன் அவனை தர தர வென இழுத்து சென்று , படிக்கட்டுகளுக்கு பின்னால் அறையில் தள்ளினார் ! அங்கு வித்தவுட் டிக்கெட்  , ட்ராக் கிராஸ்ஸிங் போன்ற முப்பதிற்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.

 நீ என்ன கேஸ் யா ? பெட்டி திருட்டா ? என்று சகலரும் அவனை கேள்வியால் தொலைத்து எடுக்க ... அவனோ சிரத்தையுடன் அலசி ஆராய்ந்து டிக்கெட் ஐ கண்டுபித்து நேரே அந்த அதிகாரியிடம் காமித்தான். என்ன உம் பேரு என்று கேட்டார் , அதான் டிக்கெட் காமிச்சாச்சு அப்புறம் என்ன பேரு , ஊருன்னுகிட்டு  என்றான்.
     
            கேட்டா சொல்லுயா!

  கிராமத்தான்னா  அவ்வளவு எகத்தாளம்... "சுரேசு" திருமயத்தான்  என்று கூறிவிட்டு விருட்டு என  வெளியே நடந்தான்.

  பன்னிரண்டு மணி வெயில் மண்டையை பொளந்து தள்ளியது , ஒரு வழியாக விசாரித்து 66 நம்பர் பஸ்சில் ஏறி ஜன்னல் சீட்டை பிடித்தான் பெட்டியை பக்கத்து சீட்டில் வைத்துவிட்டு , கண்டக்டரிடம் 2 டிக்கெட்  என்றபடி 50 ருபாயை நீட்டினான்.

     மீதி 3 ரூவா ?

  பரவால்ல , நீங்களே வெச்சுகோங்க .

  யோவ் ! நீ தரணும் யா .

  ஓஹ் டிக்கெட் வெல ஏறிட்டோ? .

அது ஏறி வருஷம் ஆச்சு.


 தேடி தொழவி சில்லரையை கொடுத்தான் , பஸ்சை   எடுப்பதாகவே தெரியவில்லை ,  கூட்டமும் தேறவில்லை ... பிரயாண களைப்பில் நன்றாக தூங்கிவிட்டான்.

சற்று நேரம் கழித்து ஒரு தடிமனான ஆசாமி அவனை உலுக்கி எழுப்பினான் " ஆளுங்க உக்காறவே எடம் இல்ல , பொட்டி கிட்டி வேற"

   யோவ் ! அதுக்கும் சேத்துதான் டிக்கெட் வாங்கிருக்கு, நில்லு பேசாம.

  பொட்டிய எடுக்கறியா , இல்ல தூக்கி வெளிய எரியட்டுமா ?

   ஓ ! வெளிய எரிஞ்சுருவியா ? தொடுயா பாக்கலாம் , கைய வெச்சுபாருயா .


இப்படி இவர்கள் வார்த்தை தடிக்க , இருவர் பக்கமும் சார்பாக சில பேர் பேச பெரும் கூச்சல் குழப்பம் உண்டானது.கண்டக்டர் பெரிதாய் விசிலடித்து, சும்மா உக்காருங்கய்யா பூந்தமல்லியே வரப்போவுது என்று கத்த. அனைவரும் அமைதியாயினர்.

சுரேஷ் பூந்தமல்லியில் ஒருவழியாக இறங்கி வேட்டியை சரி செய்து கொண்டான் , சுத்தி முத்தி நோட்டமிட்டபடி சாலையை கடந்தான் எதிர்மார்கத்தில் வந்த பஸ்சில் ஏறினான்.

 அவனருகே வந்த முதியவர் கரகரப்பான குரலில் மெதுவாய் " வர்ற  ஸ்டாப்பிங் தான் கல்லறை" என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

  அவனும் இறங்கினான் , ஒரு தெருவில் நடக்க  தொடங்கி  சாலை போகிறபடி வளைந்து , நெளிந்து நடந்தான் யாரையும் விசாரிக்கவும் இல்லை . ஒரு மூத்திரசாந்தில் நுழைந்து மீண்டும் நடக்க தொடங்கினான் . கிட்டத்தட்ட 20 நிமிடம்  நடந்து கடந்து ஒரு மத்திய அரசாங்க கிடங்கை அடைந்தான். ஆள் அரவமே இல்லாத இடம் !

 தனது பெட்டியை திறந்து அதில் உள்ள அழுக்கு துணிகளை களைத்து , மெதுவாக நோட்டமிட்டபடியே ஏதோ உதிரி பாகங்களை  எடுத்து இணைக்க  ஆரம்பித்தான்

அட "டைம் பாம்" !

 பாமை முழுவதும் தயார் செய்து முடித்தான் , பொருத்துவதுதான் மிச்சம் .


  பட் என ஒரு சத்தம்! சுரேஷின் தொடையில் இருந்து ரத்தம் வழிந்தது ...

அவன் பின்னால் இருவர் அவன் கைகளை மடக்கி பிடிக்க . " என்ன ஏ.ஜே.கே , போலாமா ?" என்றபடி துப்பாக்கி கையுடன் காவலர் சீருடையுடன் காட்சியளித்தார் பஸ்சில் பார்த்த அதே தடிமனான ஆசாமி.!

 அவனை தர தர வென்று இழுத்து வந்தனர் , வரும் வழியில் பஸ்சில் இடம் சொன்ன கிழவர் நெற்றியில் குண்டடிபட்டு இறந்து கிடந்தார்.

 அப்போது பரபரப்புடன் வந்த மற்றும் இரு அதிகாரிகள் , சார் இன்னொருத்தன் காலேஜ் பஸ்யயோ.இல்ல ஸ்கூல் பஸ் வெடிக்க வெக்க மனித வெடிகுண்டா பெங்களூரு ஹை வே ல பைக் ல போய்கிட்டுருக்கானாம்.

 சரி கொஞ்ச நேரத்துக்கு ஸ்டுடென்ட்ஸ் பஸ்ச ஸ்டாப் பண்ணுங்க .

நமக்கு இப்போ தான் தகவல் கிடைச்சுது , அதுமட்டும் இல்லாம இது சீக்ரெட் ஆபரேஷன் பப்ளிக் பயப்படக்கூடாது.

ஆல்ரைட் , இன்போர்ம் அவர் டீம் டு ரஷ்  இன் .  நாம வேகமா போவோம் டிராபிக் இல்ல , வி ஷுட்  ட்ரை அவர் பெஸ்ட்.

   ஏ.ஜே.கே வுக்கும் நெற்றியில் துப்பாக்கியால் சிவப்பு பொட்டை வைத்துவிட்டு விரைந்தனர்.


 அந்த மூணாவது ஆசாமி  ஒரு பழுப்பு நிற பைக்கில் பறந்து கொண்டிருந்தான் , புயல் வேகத்தில் இவர்களும் துரத்த , எதிர் திசையிலும் அவனை மடக்க வீரர்கள் விரைய ... சரியாக இருதரப்பினருக்கும் 2 கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு கல்லூரி பேருந்தை நெருங்கி விட்டான் ...

  பேருந்திற்கு பின்னால் ஒரே ஒரு பெரிய கண்டைனர் லாரி மட்டுமே அதை கடந்தால் ... பஸ் ப்ளாஸ்ட் !

அவன் புயல் வேகத்தில் கன்டைனரை கடக்க முற்பார்ட்டன் , ஒரு சிறிய பாலத்தில் வண்டி சென்று கொண்டிருந்தது , இன்னும் இரண்டு வீல் தான் பாக்கி !  லாரியை அணைத்து தாண்ட அவன் முற்பட்ட தருணத்தில் ... டமார்  என்ற ஒரு பெரும் சத்தம் ! லாரி டயர் வெடித்தது  அதுவும் அவன் சரியாய்  அதற்கு நேரே வருகையில் .

அவன் நிலை தடுமாறி பாலத்திலிருந்து கீழே விழுந்து வெடித்து சிதறினான்...

            "தேங்க்  காட்" என்றபடி வீரர்கள் பெருமூச்சு விட்டனர் !

   --- சா .ரா













































Monday, 3 June 2019

மறுபடியும்

                                           
                                                   மறுபடியும் 



                           ஒரு சில நாட்களாகவே சலிப்பு ...

         ஸ்கூலுக்கு போகுற ( சில ) பிள்ளைகளை போல , கடனே என்று அலுவலகத்துக்கு சென்று வந்தேன்.

   தற்செயலாக ஈ -மெயில் பார்க்கையில் , நாளைய மறுநாள் "திருச்சி"யில் ஒரு நேர்முகத்தேர்வு .

  தம்பியிடம் கூறினேன் " அவனவன் திருச்சி , மதுரை , திருநெவேலிலேந்துலாம் பொட்டி படுக்கையோட மெட்ராஸுக்கு வந்து அடைக்கலம்மாயிட்டான் , நீ என்னடா ! , அண்ணியையும்  கூட்டிட்டு போறியா ? ஓஹ் , இன்டெர்வியூவாக்கும்"

 என்று அவனுக்குகே   உரிய குசும்பில் கேட்டு , ரயில் டிக்கெட் புக் செய்து கொடுத்தான்.

 மறுநாள் (வியாழக்கிழமை) அலுவலகம் சென்று , வெள்ளிக்கிழமைக்கு விடுப்பு தெரிவித்து , சனிக்கிழமையும் பிரயாண களைப்பை கரணம் காட்டி மட்டம் போட்டு விடலாம் என்று எண்ணிய போதே குதூகலமாய் இருந்தது .

 ஒரு வழியாக வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு , அப்பா,அம்மா,மனைவி , தம்பி என அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தாம்பரம் சென்று "மலைக்கோட்டை விரைவு" வண்டியைப் பிடித்தேன்.

  அதிகாலை 4 மணிக்கெல்லாம் திருச்சி ஜங்ஷனை அடைந்தேன் , அங்கேயே ஏசி வைட்டிங் ஹாலில் சகல கடன்களையும் முடித்துவிட்டு குளித்தேன் .

 மணி 6 ஐ கூட நெருங்கவில்லை ! காபியை குடித்துவிட்டு "உச்சி பிள்ளையாரை" பார்த்துவிட தீர்மானித்தேன்.

ஆலயத்தை அடைந்தவுடனே எண்ணற்ற மலரும் நினைவுகள் ...


  • சித்தப்பா மகனுடன் படிக்கட்டில் சறுக்கியே இறங்குவது.
  • ஜான்ஸ் ஐஸ் கிரீமை அளவில்லாமல் தின்றது .
  • சித்தியின் பட்ஜெட்டைத்  தாண்டி பட்டாசு வாங்கி வெடித்தது.
  • பரோட்டா கடையில் சண்டை போட்டது.
  • மெயின் கார்ட் கேட்டில் எலெக்ட்ரானிக் குப்பைகளை வாங்கி வீணடித்தது.
  • தெப்பக்குளத்தில் போட்டிங் சென்றது...


காசை பற்றிய கவலையே இல்லாமல் சிட்டாய் பறந்த.. பரந்த நாட்கள் !

  கோவில் படிக்கட்டுகளை பார்த்தவுடனே தம்பியுடன் குடு குடு வென ஒரேமூச்சில் ஏரியாதைப் போல , தற்போது ஏற முடியுமா என்ற என்னம் தோன்ற...

    தட தட வென்று ஓடி ஏறிவிட்டேன் , பயங்கரமாய் மூச்சு வாங்கினேன் !


 பரவால்ல முப்பதை நெருங்கபோறோம் இன்னும் "யூத்புல்" லா தான் இருக்கோம் என்ற குஷியுடன்.

   " தாயுமானவரையும் - உமையம்மையையும்" கண் குளிர தரிசித்தேன் , இவ்வளவு பெரிய லிங்கமா , என்னுடைய நினைவிலேயே இல்லை .

  சொற்ப ஜன நடமாட்டம் தான் இருந்தது .

   அங்கு ஒருவர் மனமுருகி சிவனை துதித்துக்கொண்டிருந்தார் , இடைஇடையே "திரிசிரண் மலை" என்று கூறிவந்தார்.

 ஒரு வேலை அதுதான் மருவி திருச்சிராப்பள்ளி ஆனதோ என்று யூகித்துக்கொண்டேன்.

  பிறகு உச்சம் ஏறி "உச்சி பிள்ளையாரை"க்கண்டேன் !

" விபீஷணரு , ரங்கநாதரை கீழ வெச்ச பையன துரத்திவந்து ... மலை மேல ஏறி உட்காத்தவன் தலையில குட்டினாரு, அந்த பையன் தான் இந்த புள்ளயாரு" என்று அப்பா கூறியதை நினைத்துக்கொண்டேன்.

  மலை உச்சில் இருந்து "ஸ்ரீரங்க கோபுரம்" , காவிரிப் பாலம் , சர்ச் , மசூதி , ஜவுளி கடை , என ஒட்டு மொத்த நகரத்தையும் பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பாத்த மாதிரி கண்டுகளித்தேன்.


  எனது விலையுயர்ந்த செல் போன் கேமராவில் , நான் கண்ட காட்சிகளை படமெடுக்க முயன்றேன் ... முடியவேயில்லை !

   கடவுள் கொடுத்த கண்களின் அருமை மிக நன்றாக புரிந்தது.

  பசி வயிற்றைக்கில்ல , கீழே இறங்கி டிபன் சாப்பிட்டுவிட்டு புறப்பட்டேன் .
 10 மணிக்கு பதினைந்து நிமிடம் முன்னாலேயே சென்று உட்கார்ந்துவிட்டேன்.

   உடன் அமர்ந்திருந்த பலர் , எப்படியாவது இந்த வேலையை பெற்றே தீர வேண்டும் என்ற வெறியுடன் காட்சியளித்தனர்.

  10.30 வாக்கில் என்னை அழைத்து சில கேள்விகளைத்தொடுத்தனர் , நானும் முறையாக பதிலளித்தேன். வரும் புதன் கிழமை வாக்கில் முடிவை தெரிவிப்போம் என்றனர்.

  11.15 க்கு எல்லாம் அங்கிருந்து நகர்ந்து விட்டேன்.

  ஒன்றாம் எண் பஸ்ஐ பார்த்தவுடன் "திருவானைக்கா" நினைவுகள் சுண்டி இழுக்க ஓடோடி சென்று இடம் பிடித்தேன்.


  • பாட்டியுடைய பாசத்தில் ஜோராய் திரிந்தது  .
  • வேட்டி கட்ட ஆரமித்த புதிதில் , அது காற்றில் பறந்து கதிகலங்க வைத்தது ..
  •   பந்தடித்து ஓட்டை உடைத்தது.
  • சுட்டி விகடனுக்கு கொத்துக்கொத்தாய் தபால் போட்டது.
  • கலர் குருவி வாங்க காசு சேத்தது.
    இப்படி நினைக்கையிலே நிறுத்தமே வந்துவிட்டது!

     நான் நுழையும் நேரம் அழகிய  "அகிலா" யானை சாப்பிட்டுக்கொண்டிருந்தது.
அர்ச்சகர் புடவை , கிரீடம் அணிந்து "கோ" பூஜை செய்து முடித்தார்.  

   ஆனைக்கா அண்ணலை அருகே சென்று பார்த்தேன் , அகிலாண்டேஸ்வரியை ஆனந்தமாய் கண்டுகளித்தேன்! 

   மதியம் கொத்தவரங்காய் வற்றலுடன் சாப்பிட்டுவிட்டு நடக்க ஆரமித்தேன்..

  ஆம் ரங்கநாதரை சந்திக்க ! ஆனந்த நினைவலைகள் என்னை முழுவதும் ஆட்கொண்டுவிட்டதால் , வெயிலோ ,அலுப்போ அறவே இல்லை.

 கூட்டத்தில் நின்று  நிதானமாய் ரங்கநாதர் , தாயார் , ராமானுஜர் ,முதலிய யாவரையும் தரிசித்துவிட்டு 153 ஏக்கர் கோவிலை முடிந்த முட்டும் சுற்றினேன்.

 236 அடி ராஜ கோபுரத்தை கண்டுகொண்டே  இருந்தேன் ... 

அதே கடைகள் , நறுமலர்கள் , மாவுமில் சத்தம் , காபித்தூள் நறுமணம் , பஜ்ஜி  ! பிறகு நாங்கள் சிறுவயதில் ஓடித்திரிந்த பூங்காவில் , சுண்டலுடன் உட்கார்ந்து இளைப்பாறினேன்.

  " அடேய் குண்டா ! இங்க என்ன பன்ற ? , எத்தனை வருஷமாச்சு அதே நீலச்சட்ட ,அதே உருவம் ! 

  மூச்சுவிடாமல் பேசினார் "ரேவதி" அக்கா ! , சீர்காழியில் ஒரே வீட்டில் வசித்தோம். இங்கே வாக்கப்பட்டு வந்துள்ளார். வலுக்கட்டாயமாய் சாப்பிட கூட்டிச்சென்று விட்டார். அதே பாசம் !

  எதிர்பாரா சந்திப்பு , அருமையான தருணங்கள் ...

 பிரியா விடைப் பெற்று , ஸ்ரீரங்க ரயில் நிலையத்தில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு . மீண்டும் பஸ் ஏறி மத்திய பேருந்து நிலையம் அடைந்தேன்.

   "ஜே.ஜே" வ கூட்டிகிட்டு இன்னொரு தடவ வரணும் , அவளோட மாமா  வீடு கூட இருக்கே ! முடிஞ்சா  எல்லாருமா வருவோம் என்று நினைத்தபடியே "லொட லொடா" வண்டியில் ஏறி,  கண்ணில் நீர் வழிய ( இன்பக்கண்ணீர் ) வந்தேன்.

 மறுநாள் காலை 7 மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விட்டேன். அனைவரிடமும் பயண விபரத்தை விரித்து கூறிவிட்டு , குளித்து , சாப்பிட்டுவிட்டு ,அலுவலகம் புறப்பட்டு விட்டேன் ... உற்சாகத்துடன் !


  அறிஞர் அண்ணா கூறியதைப்போல "ஓய்வு" என்பது  மனம் சார்ந்தது தானோ ?




                                                       ______ சா.ரா _______ 
                                                                  

                                                                         









 

































































Saturday, 16 March 2019

காஞ்சிவரம்

காஞ்சிவரம் 


"மனிஷ்"ற்கு தமிழ்நாடே புதுசு  அவனுடைய மிக சிறுவயதில்  அதுவும் அவனது ஆறாவது வயதில் "அண்ணா நகர்" வந்துள்ளான். இப்போது அவனது நினைவில் நிழல் அளவு கூட அவை நினைவில் இல்லை.

காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு விமானத்தில் வந்துகொண்டு இருக்கிறான்!  அங்கு ஒரு எந்திரத்தை பழுது பார்க்கும் வேலை. வரும் வியாழன் , வெள்ளி இறுதினங்கள் இங்கு தான் இருக்கபோகிறான்.

விமானம் காலை 9.00 மணி அளவிற்கு சென்னை  வந்து இறங்கியது. விமானச்செலவு, அங்கிருந்து டாக்ஸி ,தங்குமிடம், உணவு , இவை அனைத்தும் அந்நிறுவனத்தின் பொறுப்பு. எனவே கொளுத்தும் வெயிலிலும் குளு குளு வென்றே இருந்தான்.

மனிஷ் மும்பையிலேயே பிறந்து வளர்ந்தவன், மராத்தி அவனது தாய்மொழி,இந்தி நன்றாராக பேசுவான், மற்றபடி ஆங்கிலம் முதற்கொண்டு தகராறுதான். வேலையில் கெட்டிக்காரன். 

பத்துமணிவாக்கில் அந்நிறுவனம் வந்து சேர்ந்தான் , சில நிமிடங்கள் அறிமுகப்படுத்திக்கொண்டு பணியை தொடங்கினான் மதியமே கணித்துவிட்டான் இரண்டுநாட்களில் முடிகின்ற வேலை இல்ல இது என்று ! தனது டெல்லி தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்து மேலும் சிலதினங்கள் கேட்டுப்பெற்றான். வரும் புதன் கிழமை காலை மீண்டும் மும்பைக்கு பறந்துவிட உத்தேசித்தான்.

அன்றையதினம் ஆட்பற்றாக்குறை , மொழி பிரச்சனை என பல சிக்கல்களை சந்தித்து தனது ஓய்வறைக்கு திரும்பினான். உணவருந்திவிட்டு "அமிதாப்பச்சனின்" புதிய படத்தை பார்த்து விட தீர்மானித்தான்.

சற்று தூரம் கடந்து வந்து ஸ்டாண்டில் ஆட்டோ விசாரித்தான். "குணவேல்" நன்றாக ஹிந்தி பேசவே அவருடைய ஆட்டோவில் "பாபு" திரையரங்கம் புறப்பட்டான்.

இருவரும் நன்றாக பேசிக்கொண்டு சென்றனர், மனிஷ் குணா விற்கும் டிக்கெட் எடுத்து உடன் அழைத்து கூட்டிச்சென்றான்.

வரும் வழியிலும் நன்றாக நெடுநாள் நண்பர்கள் போல பேசிக்கொண்டு வந்தார்கள் அப்போது நள்ளிருளிலும் மின்னிய "கைலாசநாதர் கோவில்" அவனை அசத்தியது.

ஓய்வறைக்கு திரும்பியவுடன் குனவேலிடம் மொபைல் நம்பரை பெற்றுக்கொண்டு , பேசியதை விட இருநூறு ருபாய் அதிகம் கொடுத்த னுப்பினான் .

வெள்ளிக்கிழமையும் மிக மந்தமாகவே சென்றது, அதிக நேரம் செலவிட்டும் பலனளிக்கவில்லை. சனிக்கிழமை வேலை விறுவிறுப்பாக சென்றது , பல உதவியாளர்கள் ஒத்துழைக்க கிட்டத்தட்ட 90% பணி முடிந்தது , திங்கட்கிழமையே பறந்து விடலாம் என்று அவன் உள்ளம் குதூகலித்தது.

ஞாயிற்றுக் கிழமை பொறுமையாக எழுந்து , குளித்துவிட்டு ,நிதானமாக டிபன் சாப்பிட்டுவிட்டு, கிளம்பி ஆட்டோவிற்கு காத்திருந்தான் , "டொக் டொக்" சப்தத்துடன் குணவேல் ஆஜர் ஆனான்.

பெரும்கூட்டத்தில் நசுங்கி வரதராஜரை தரிசித்தான் , பிறகு அவனது அம்மாவின் கட்டளைப்படி சித்திரகுப்தர் கோவில், பிறகு ஷாப்பிங் தேடித்தேடி பட்டுப்புடவை , சட்டை என தனக்கும் , பெற்றோரிற்கும் வாங்கிவிட்டு. நல்ல ஹோட்டலில் சாப்பிட்டனர்.

ஆட்டோவில் இருந்த காஞ்சி முனிவரை பார்த்து யாரென்று கேட்க , குணா மெய்சிலிர்த்து அவரது பெருமைகளை கூறினான். உடனே ஸ்ரீமடம் செல்ல தீர்மானித்தான்.  சட்டென்று அன்று இரவு பார்த்த இடம் நினைவுவர , குனவேலிடம் கூறி புரியவைத்தான். 

இருவரும் வெய்யல் தாழ  "கைலாசநாதர் கோவிலை" அடைந்தனர் , அங்கிருந்து மடம் , இரவு சாப்பாடு , இரவுக்காட்சி சினிமா என முடிவெடுத்தனர்.

அந்த ஆலயம் மிகவும் பிடித்துபோனது மனிஷ்ற்கு , சொற்ப ஆட்கள் நடமாட்டமே இருந்ததால் மிக நிதானமாக ரசித்து ரசித்து பிரகாரத்தை சுற்றிச்சுற்றி படம் பிடித்தான். சிற்பங்கள் அவனை திக்குமுக்காட செய்தது ,குறிப்பாக மதில் மேல் அமர்ந்த குட்டி யானை சிற்பம் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

மூலவர் சுற்றுப்பாதையை  குனிந்து உள்சென்று , தவழ்ந்து வெளியேறியது அவனிற்கு பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. அர்ச்சகர் சரளமாக ஹிந்தி பேசியதால் அவரையும் சிறப்பாக கவனித்தான்.

மத்திய தொல்துறை கோவில் என்பதால் ஹிந்தியில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்புகளை படித்து அறிந்துக்கொண்டான். பிறகு நந்திச்சிலையும் அவனை கவர்ந்து இழுத்தது, நந்தியின் பின்புறத்ததில் ருந்து பல கோணங்களில் படம் பிடித்து மகிழ்ந்தான் , தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு மகிழ்ந்தான்.

ஆவலுடன் குளத்தை காணச்சென்றான் , இரண்டுநாட்களுக்கு முன் பெய்த மழை சிறு குட்டையாக தேங்கி இருந்தது . ஏமார்ந்து போனான்.  அந்த குட்டையில் விசித்திரமாக ஏதோ தெரிய உற்று நோக்கினான். அதில் கிரீடம் , மீசையுடன் ஒரு உருவம் தெரிய பதறி நகர முயற்ச்சித்தான் , அதற்குள் அது பீச்சி அவன் மேலே அடித்தது.

அவன்கண்கள் தீச்சிவப்பானது , நடை , உடல் மொழி , பாவனை என சகலமும் மாறியது ! , அங்கிருந்து கோவிலை நோக்கி மிடுக்குடன் ஆவேசமாய் நடந்தான்.

பாழடைந்த சிற்பங்களைக் கண்டு நரநர வென்று பற்களை கடித்தான் , அங்கு வந்துக்கொண்டிருந்த ஒருவனை அலேக்காக தூக்கி "ஏனடா , இப்படி பாழ்செய்தீர்" என கர்ஜித்தான். அவனோ " ஏனுங்க , நா அசலூருங்க , விட்டுபோடுங்க என பலவாறு அலற ஆரமித்தான் , கூட்டம் கூடி மிரண்டு போய் பார்த்துக்கொண்டிருந்தது.

அவனை பொட்  என இறக்கி விட்டுவிட்டு , பிரகாரத்திற்குள் சென்றான்               " எங்கே வேதியர் குழு" என்று அதட்ட "நான் மட்டும் தான் இங்கே இருக்கேன்,நாழியாரது , நகருங்கோ, நடையச்சாத்தனும், நமசிவாயா காப்பாத்து..." என்று அவர் தலை தெறிக்க நழுவிட , அங்கிருந்த சுண்ணாம்பு கட்டியை எடுத்துக்கொண்டு வந்து சிதிலமடைந்த சிற்பத்தின் பகுதிகளை தத்ரூபமாய் வரைந்தான்.

பிறகு கல்வெட்டுகளை படித்துவிட்டு "விக்கிரமாதித்தா" என்று அலறினான், அப்போது அங்கு வந்த குணா மனிஷ்ஷை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

சற்று நேரத்திற்கு பிறகு நிமிர்ந்து அமர்ந்து தியானித்தான் , சாதாரணமாக நடந்து வந்து ஆட்டோவில் அமர்ந்தான். என்னங்க ஆச்சு , இப்போ எங்க போகலாம் என்று இந்தியில் தயக்கத்துடன் குணா கேட்க "செல் ! மாமல்லபுரம்" என்று கூறி  ராஜதோரணையில் சமிக்கை செய்தான்.

   "நீ மொதல்ல காச காட்டு , நா வரேன்"

   "வீரசிம்மன் கூறுகிறேன் , அங்கு வா பொற்காசுகளை வீசுகிறேன்"

    " நீ இங்க அடிச்ச கூத்து போதாத , என்ன ஆளவிடு , எறங்கு கீழ"


          " மன்னர் உத்தரவை மீறினால் சிரச்சேதம் , ஜாக்கிரதை"

இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்க , தூரத்தில் இருந்து ஒரு சித்த பிரமை பிடித்தவராய் தோற்றமளிக்கும் , கந்தல் ஆடை கிழவர் இவர்கள் அருகில் வந்து " மன்னர் மன்னா ! வந்தனம் ! இந்தாருங்கள் என்று இருபது புதிய  ஐநூறு ரூபாய் தாள்களை திணிக்க, அதை அப்பிடியே குண வேலிடம் குடுத்து "செல்"
என்றான்.

ராத்திரி ஆகிபோச்சு , பைத்தியங்களுக்கு இப்போ ரொம்ப முத்த ஆரமிக்குமே என்று குணா தமக்குள்ளே பதறிக்கொள்ள " சொற்ப காத தூரம் செல்ல ஏன் இவ்வளவு தாமதம்" என்று அதட்டிவிட்டு " எங்கே எங்களது ராஜபாட்டை ?" என்று கேட்டு விட்டு கண்களை மூடிக்கொண்டான்"

மனதிற்குள் குணா " என்ன விக்ரம் நடிச்ச படம் பேர்லாம் சொல்றான் , நமக்கு தெரியாம எதுனா கஞ்சா , டோபு , அபின்னு ஏதாவது அடிச்சுட்டானா !   என்னவோ மஹாபலிபுரத்துல இவன தள்ளிட்டு எஸ்கேப் ஆயிரணும்" என்று எண்ணிக்கொண்டே வேகமாக வண்டியை ஓட்டிவந்தான்.


கும்மிருட்டில் மஹாபலிபுரம் வந்து சேர்ந்தனர் , மனிஷ் பொறுமையாக ஆட்டோவைவிட்டு இறங்கினான் அங்குள்ள கடற்க்கரை கோவில் மற்றும் சில சிற்பத்தைக்கண்டு , களிப்பும் கோவமும் ஒன்றுசேர புன்னகைத்துவிட்டு, பெருநகைபுரிந்தான் பிறகு மயங்கி விழுந்தான்.

மறுநாள் காலை புகழ் பெற்ற பன்னாட்டு மருத்துவமனையில் கண்விழித்தான் , அவனிற்கு அன்று மாலைக்கு பிறகு நடந்தது நினைவில் இல்லை.

சில நாள் கழித்து குணா செய்திகள் பார்க்கையில்  " தொல்துறை ஆட்சியர் நடவடிக்கைகளில் மாற்றம் , அடிக்கடி தூயதமிழில் பேசுகிறார்..."  என்ற செய்தி அவனை உறைய வைத்தது.!







































Monday, 21 January 2019

(Vasu)ndra

                                                            (Vasu)ndra
Vasu is in hurry as well as excited, within a few hours his cousin brother Dhinesh’s wedding reception and so he is doing all arrangements with pleasure but that is not the reason for Vasu's excitement…

His excitement, thrill started when he heard that his own sister is coming to this marriage from Jodhpur, almost after 6 years since she settled there due to her husband’s job transfer with the promotion.

Vasu met them very few times in these many days at the same time he didn’t meet their daughter vasundra who was his dear friend, school mate before 6 years.

Once he comes to know that she is coming, A lot of imaginations and questions within him

“Will she remember me? “
“Will she talk to me?”

“She is also in 12th grade! Will her marks be more than mine?”

The much expected time came for him.

His sister came in Punjabi style chuddy with full makeup with dark lipstick behind her she entered in wearing half saree, straight bindhi, light powder without lipstick.

First  2 hours he wasn’t even able to face her due to shyness, then slowly he broke the ice and began the formal conversation.
“Vasu, is this the way you spoke with me ? “  she asked him with the finger on her sharp nose ., then they spoke very well. Within that one and half days, they became much closer than earlier.

Vasu had a very new feeling while she was leaving … he used to be very affectionate with all. Whenever his dear ones come and leave he will feel sad, but this time he felt like there will be no tomorrow in the world.

Vasu and Vasundra started normal texting it continued till board exams. After a small pause, they texted wildly.

Vasu felt that this summer is the best in his life. If he didn’t text she will fire on! 
Rate cutters and boosters were not enough for their texting speed.

Results came. Vasundra scored more than him
Vasu joined B.sc Chemistry, she selected  Integrated M.sc  IT ( 5 years course combo of B.sc and M.sc )

All of Vasu’s friends are wondered while he joined Chemistry course because he hated chemistry staff and subject that much!
Then only they come to know she is thinking chemistry students are brainier.

With B.sc chemistry he tried to work out his chemistry also 😊

Both started to gift on each other's birthdays.

Days moved, their chats turned smarter in their first year of studies G-Chat, Messenger, Hike, Skype, Vivo, Instagram, Whatsapp, Duo and so on.. if any new app launched they will be there !.

Next year, they did video chats often and other atrocities like Dubsmash, Tik tok.
Vasu’s Whatsapp staus are full of the love song, Insta stories full of romantic quotes, he started thinking all love songs are made for them, he didn’t feel a single flaw on his final year., He prepared a project to meet her so he found a company near Pune for Internship.

He planned very neatly and informed her well before, after 5 days sincere attention at an industry, at weekends he convinced to his sister and uncle for Mumbai site seeing.

That Trip is like a “Bombay Dreams” to him due to age factor parents use to lack behind hence they had their time at Local trains, beaches and Skywalks.
He had the best time with her while returning itself he planned for the next meeting.

One day he entered home singing a peppy song that moment itself his father bombarded “You insulted me, you are a shame to me, idiot I gave more space to you . .. Your uncle called me and told me to keep you engaged in just your studies and not with his daughter” and left.
His mother explained it later, Vasu felt broken but he had a relief that they came to know their affair!

Things got worse... Once he called Vasundra unexpectedly his sister picked and blasted him he didn’t mind much but one word of her “Know your range” made him think further.

 Vasundra’s phone blocked, she used to text him from her friend mobile and call from other PP number but later that too reduced rapidly.

Vasu joined in a Drug company as a junior level employee, till then he used to think about register marriage and cinematic hijack but now only he can understand the real world.

He posted a detailed letter to Jodhpur, then concentrated on his job and improved gradually, within a few days he got a good name.
Vasundra's parents told her to quit her studies in 3rd year after they came to know about her affair with Vasu and made arrangements to get her married as early as possible. But she argued with her parents and finally denied to quit college and continued her studies with much pain in the heart.
Both of them missed each other very much.

Vasu got an offer from a top MNC with a great package, he joined in next level position at pharmogroviglilance.

As he mentioned in that letter he proved himself .. waiting for the right moment to approach her parents with his parents!

Vasu weds Vasundra very soon ☺

Sunday, 30 December 2018

ஜாலத்தேற்றம்

                                                      ஜாலத்தேற்றம் 


                                                     இடம் : ஸ்ரீதர் வீடு  

                  எனக்கு என்ன ஆச்சு ...? இப்போ நான் எங்கே இருக்கேன் !!

                    நம்ம வீட்டுல தான் அப்பா , எல்லாம் சரியா போச்சு இனிமே                                     ஒன்னும்  கவலை இல்லை.

                 வந்துட்டு  போறவங்க என்ன சொல்றாங்க ஸ்ரீதர் ?

                   நா இப்போ சொன்னத தான் சொல்லிட்டு போறாங்க .

               எதையோ மழுப்பற டா நீ , எத்தனை நாளா இப்பிடி கோமால                                  இருந்தேன் ?

                "கோமா"லாம் கிடையாது அப்பா , நினைவு பிசகு . ஜஸ்ட் ஆரே                             வருஷம் தான் ஓடிப்போச்சு . நாம இப்போ 2032 ல இருக்கோம் அப்பா.


               அச்சச்ச்சோவ் !   

             ஏன் இவ்வளோ அதிர்ச்சி காமிக்கிறீங்க , ரெப்பிரேஷ் ஆகிட்டு வாங்க                   வெளிய போயிட்டு வரலாம்.

                 
                 ஸ்ரீதரா... என்ன டா பாத்ரூம்ல  டப்பு இல்ல , மஃகுமில்ல , தண்ணி                         கொழாயக்கூட  காணும் ?

                     ஓ   அதுவாப்பா , அங்க கண்ணாடி மாதிரி இருக்குல்ல அதுகிட்ட                           நில்லு  முதல்ல தண்ணி , அப்பறோம் சோப்பு ஆயில் , திரும்ப                                  தண்ணி , கடைசியா வெதுவெதுப்பான ஸ்டீம் .. அவ்லாவ்தான்                                சொல்ல மறந்துட்டேன் துண்டோட நிக்கறதும் , பிரீ யா நிக்கறதும்                         உங்க சவ்கரியம் :)


                      சேச்சே இடியட் .


                                                        



                              என்னடா ஸ்ரீதரா இது ஜம்போ சைஸ் ஓணான் மாதிரி ?

                    
                          ஸ்கூட்டர்  , இப்போல்லாம் இது தான்                                                                                      மொத்தமா ஆட்டோமேட்டிக் ! உக்காந்து லொகேஷன் செலக்ட்
                          பண்ணினா போதும் அதுவா கொண்டு போய் விட்ரும். தேவைப்பட்டா லைட் ஆஹ் திருப்பனும் அவோலோதான்.

                                என்ன மைல் ஏஜ் ? 

                    இது கரண்ட்ல ஓடுது அப்பா , வீக்லி 2 தரம் சார்ஜ் பண்ணனும்.

                   
                              எத்தனா ரூவாடா ?


                        3000  A4E .  ரூவா , டாலர்லாம் கிடையாது .


                             அது என்ன டா    A4E  ?

                       ஆசியா , அமெரிக்கா , ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா, ஐரோப் .                               சிம்பிள் ஆ சொல்லணும்னா உலகம் முழுக்க ஒரே ரூவா , ஒரே                                 மதிப்பு.

                                சாரீ டா , ரொம்ப கேள்வி கேட்டு கொடையரேனா !!

                              நத்திங் லைக் தட் அப்பா :)


                                          வீட்டிற்கு வெளியில்
              

                        ஏன்டா இவ்வோளோ வேகமா போற , பாத்து..

                     அப்பா , இது கொறச்சலாவே 100 கிலோமீட்டர் வேகத்துல தான்                              போகும்.

                     அப்பாடா ஒருவழியா நிறுத்திட்ட தல சுத்துது டா.

                       பழகிரும் அப்பா .

                   என்னடா நைஸ்சா கேரளா கூட்டிண்டு வந்துட்டியா ? சித்த                                        வைத்தியமா ... அப்போ ..

                    அப்பா! இது நம்ம ராயப்பேட்டை தான் .

                 என்னடா  ஒளரற ? பச்சை பசேல் மரம் , ஏரி ! அகலமான ரோடு                              அதுவும் பூராகூண்டு கட்டடங்களே இல்லாம இருக்கு ?!? இத போயி                         ராயப்பேட்டைனு சொன்னா எவன் நம்புவான் ?

                
                என்மேல நம்பிக்கை இல்லாட்டி அந்த பெயர் பலகையை பாருங்க                       அப்பா.

                கண்ணுக்கே தெரியல , அதைபோய் நேம் போர்டுனு சொல்லிக்கிட்டு !

                  கிட்ட போனீங்கன்னா பெருசா தெரியும் .

              அது சரி டா , இந்த இடம் ..

              கங்கா-காவேரி திட்டம் வந்தது, அப்போ தான் உள்நாட்டு கப்பல் போக்கு வரத்து ஆரமிச்சது , அதுக்கப்புறம்  நகரங்கள்ல உள்ள
 ஏரியெல்லாம் இணைச்சாச்சு.

               இங்கேந்து கொல்கத்தா போக 2  மணிநேரம்தான்  கப்பல்ல...

            தாம்பரம்,கீழகட்டளை,போரூர்,கோயம்பேடு, செங்கல்பட்டுனு எங்க பாத்தாலும் படகுல போகலாம். 

               அடேய் நா என்ன கேக்குறேன் நீ என்ன சொல்ற ? 

           இதுக்குல்லாம் தான் இங்க , இந்த மாதிரி எடத்துல இருந்தவங்குளுக்கு               எல்லாம்  நிலத்தோட அப்போதிய மதிப்புக்கு  3 மடங்கு பணம் குடுத்து காலி பண்ண வெச்சுது அரசாங்கம்.


             ஓ ஹோ... நாம இப்போ எங்க போறோம் ?

   அதோ தெரியுது பாருங்கப்பா அதுதான் விவசாயிகளுக்கான அரசாங்க குடியிருப்பு , எல்லா விவசாயியும் இப்போ அரசாங்க ஊழியர்.

              நாம ஏண்டா அங்க.வரோம் ?


    அப்பா .. நா 3 வருஷம் லாபகரமா அரசாங்க தோட்டதுல பயிர் செஞ்சேன்,        இனிமே நானும் அரசாங்க ஊழியர், அடுத்த வரத்துலேந்து நாம எல்லாரும்         இங்க தான் .

          ஸ்ரீதர் ஸோ ப்ரௌட் ஆப் யு டா ! குவார்ட்டர்ஸ் அருமையா 5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருக்கு. அது என்ன டா முடிச்சு முடிச்சா.

              அது மிதிவண்டி பாதை, இது பிளையிங் கார் வே , இது நானோ ரயில் , அது புல்லட் ரயில் . 
  

              ஒரு பிலைட்ட கூட காணுமே டா ?

       அதெல்லாம் புழக்கத்துல்ல இல்ல அப்பா , ராணுவத்துல மட்டுமே அரித பயன்படுத்தரங்க.

             வேற எதுலாம் டா இப்போ  புழக்கத்துல இல்ல ?
                       

                கள்ள ஓட்டு , கொச்சை தமிழ் , மொழி அரசியல் , மத அரசியல் ,   சாதி                 பேதம் ,லஞ்சம் ...

                  ஸ்ரீதர் ..

           அப்பா இன்னிக்கு இது போதும் , வண்டில ஏறுங்க . 

           நா ஓட்றேன் டா , பின்னாடி உக்காரு.


                                                                                     சா.ரா.



             





     












               







 
           

                

Monday, 1 October 2018

நேரெதிர்

                                                  நேரெதிர்   ( நேர்-எதிர் ) 


      காட்சி - 1  ரகுபதி  வீட்டில் 


    என்ன சீனு போறானா ...?

         தெரியலீங்க சிடுசிடுன்னு விழுவான் கேட்டா !

     நீ தான ரேணுகா சொன்னே  "அவன் பீல் பண்றான்" வேல  கிடைச்சா தேவலனு சொல்றான் .., இன்னும் என்னென்னமோலாம் .., இப்போ இந்த வேலைக்கு என்னவாம்?

    அதோ வரான் அவனையே கேளுங்க .


 சீனு , நா குமார் கிட்ட பேசிட்டேன் நீ போயிட்டு ஜாயின் பன்னிக்கோ பார் டைம் பீயிங் 

அதெல்லாம் சரி வராதுப்பா, உன்ன யாரு பேசச்சொன்னது ?  ஆபிஸ் ஆ அது ? பலசரக்கு மண்டி மாதிரி ..

நீ என்ன லேபிள் ஒட்டப் போறியா ? , இல்ல வெயிட் போட போறியா ? உனக்கு ஏர் கண்டிஷனெட் ரூம்ல அகௌண்ட்ஸ் என்ட்ரி வேல , அதுவும் நீ படிச்ச எம்.காம் க்கு ஏத்த மாதிரி .. .

ஐயோ அப்பா ... ப்ளீஸ் எட்டாயிருவாய்க்கு பூந்தமல்லிக்கு போயி.. ,அதுவும் அங்க முடியாது !!

என்னடா பேசற ஆவடிலேந்து பூந்தமல்லி போகமுடியாதா ? ,அப்பொறம் 200 ஸீஸீ பைக் என்னத்துக்கு வெச்சுருக்க?

உன் வேலையப்பாருப்பா , சும்மா நொய் நோய்னு நச்சரிச்சிகிட்டு..சேச்சே..

இப்போ அப்பா என்ன சொல்லிட்டாருனு  இவோலோ கோவமா களம்பரே.. ?

எங்கயோ போறேன் ஆள விடும்மா. ( பைக்கில் ஏறி பறந்தான் )


பாத்தியாடி உன்புள்ளய ! , என்ன ஐடியாள இருக்கான்னே புரியல ..

சரி விடுங்க எல்லாம் சரியாயிரும் !

இன்னும் மூணே வருஷம் தான் எனக்கு சர்விஸ் ... அதுக்குள்ள சரியாகணும் !


காட்சி -2  நண்பர்கள் மத்தியில் 

விட்றா அப்பா திட்றதுக்கெல்லாம் பீல் பண்ணாத டா .. மொத மொத "மேகா" வ எப்போ பாத்த ? எப்பிடி உங்க "லவ்" ஸ்டார்ட் ஆச்சு சொல்றா .

டேய் .. போங்க டா.. 

பார்றா மச்சான் வெக்க படறான் !!

" அவள 2 - 3 தடவ காலேஜ்ல பாத்துருக்கேன் ,  அப்போல்லாம் எனக்கு எதுவும் தோணல ..ஆனா போன நவராத்திரினு நினைக்கிறேன் அம்மா கூட மாங்காடு கோவில் போயிருந்தேன் வழக்கம் போல அவங்க அடி பிரதக்ஷணம் பண்ண போய்ட்டாங்க " ...

அப்பொறம் ... , சீக்கரம் சொல்லுடா இப்பிடி சொன்னா நாளைக்கு ஆயிரும்!!

எனக்கு இப்பிடி தான் சொல்ல வரும் , இஷ்டம்னா கேளுங்க இல்லாட்டி விடுங்க டா.

நீ சொல்லு சீனு , சும்மா இரு கிருஷ்ணா !

" அப்போ "ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண கண் கோடி வேண்டாமோ"ங்கிற பாட்டுக்கு மின்னல் மாதிரி நிக்காம அபிநயம் பிடிச்சா "மேகா" , அந்த கண்ணு , முக பாவம் , முத்திரை , நிறுத்தம்னு பிச்சு ஒதறினா , ஆனந்த தாண்டவம் , ஊர்த்வ தாண்டவம்னு அப்புடியே பல கட்டத்துக்குபோய் திக்குமுக்காட வெச்சா ..."

என்ன டா இவன் என்னென்னமோ பேசறான்...!

விடு குமார் அப்புடியே கண்டின்னு பண்ணட்டும் , என்னதான் சொல்றான்னு பாப்போம்.

"அவ ஆடிமுடிச்ச அப்பொறம் தான் எனக்கு சுயநினைப்பே வந்துச்சு , அன்னிக்கு என்னோட கண்ணுக்குள்ள எறங்கி மனசுல நிலைச்சுட்டாடா"

எப்பா சாமி ஆலவிடு , தெரியாம கேட்டுட்டோம்...

என்னடா இப்புடி அல
ர்றீங்க , அப்புடி என்ன சொன்னான் சீனு.

வாடா பிளாடி பாஸ்கர் , உன்னால தான் எங்கப்பாட்ட தினம் திட்டு வாங்குறேன் . பாஸ்கர் பாரு பொறுப்பா இருக்கான் , பருப்பா இருக்கானு ...

உனக்கு சப்போர்ட் பண்ண வந்தேன் பாரு சீனு எனக்கு வேணும் டா  நல்லா !

சரி டா டைம் ஆச்சு , நா கிளம்பறேன் .

இரு சீனு நானும் உன்கூட வரேன் , உங்க அப்பாகிட்ட பேசணும் ..

என்ன விஷயம் டா ?

பூந்தமல்லில ஏதோ வேல இருக்குனு ...

சாரி பாஸ்கர் மறந்தே போய்ட்டேன் , எனக்கு அவசரமா ஒரு சின்ன வேல இருக்கு நீ எங்கப்பாட்ட பேசிக்கோ

சரி டா பை .. கேரி ஆன் .


காட்சி - 3 ( ரகுபதி வீடு )



ரேணுகா , பாத்தியா இந்த பாஸ்கர ... 8 மணிக்குவேலைல இருக்கனும்னா   "நா சீக்கிரமே ஏந்து பஸ்ல போயிருவேங்கிரான்" .. அது பொழைக்குற புள்ள !


சும்மா பாஸ்கரோட சீனுவை கம்பேர்  பண்ணாதீங்க !

பொதுவா சொல்றேன் டி !

ம்ம்க்கும்

நா இன்டெர்-மீடியட் முடுச்சுட்டு "தாண்டவ செட்டியார்"  கிட்ட கணக்கு புள்ளையா சேர்ந்தேன் ... இருந்தாலும் கடைல ஆள் இல்லாதப்போ பொட்டலம் போடுவேன் , அதுக்கே நாலு பேரு முன்னாடி "என்னையா மடிக்குற" னு கத்துவாரு ... அப்புடியே சில வருஷம் ஓட்டி , டைப்பு ரைட்டிங் முடிச்சு , பேங்க் வேலைல சேர்ந்தேன் ...

 இப்போ அப்பிடிலாம்  முடியுமாங்க ?

நா என்ன அப்புடியா செய்யச்சொல்றேன் ? , ஒரு இலக்கு வேணும்லயா ... , சொல்ல மறந்துட்டேன் உம்புள்ள எப்போவேனா மாலையும் கழுத்துமா வந்து நிக்கலாம் !

என்னங்க சொல்லறீங்க ??

ஆமாம் , அவன் "மேகா" கூட சுத்திகிட்டு இருக்கான் !

ஓஹ் ! உங்க பிரெண்டோட பொண்ணு நம்ம சீனு கூட சுத்தறாளா !!

போடி .. போ .




காட்சி-4 ( வீடு )




சில வாரங்களுக்கு பிறகு ...


சீனு நீ கோவப்பட்டாலும் பரவால்ல இன்னிக்கு சில விஷயம் பேசித்திதான் தீரப்போறேன்.

சரி...

எப்போ கல்யாணம்பண்ணிக்கபோற ? பொண்ணு "மேகா"தானா இல்ல நீங்க ஜஸ்ட் பிரெண்ட்ஸ் ஆஹ் ?

மேகா தான் பா , நீங்களே கேட்டதால சொல்லிடறேன் நா ஒரு ஏஜென்ட் மூலமா கவர்ன்மெண்ட் ஜாப் ட்ரை பண்ணபோறேன் , நீங்க ஜஸ்ட் பணம் குடுங்க போதும் , அதும் கடனா ..சம்பாரிச்சு அடைச்சுடறேன் .

நா பணம் தரமாட்டேன்னு சொன்னா  ?

யூ.பி.எஸ்.சி கோர்ஸ் சேர்ந்து படிக்கபோறேன் ...

ஏன் ஏதாச்சும் "கௌதம்" படம் பாத்தீயா? , இப்பொல்லாம் அரசாங்க வேல அவோலோ சுலபம் இல்ல "காஸ்ட்" பீலிங்ஸ் ஜாஸ்தி , அதும் நம்ம ஆளுங்கனா சுத்தம் ! இப்போ பென்ஷன் கூட கிடையாது , உனக்கே தெரியும்ல "கலியமூர்த்தி" என்ன எப்பிடிலாம் டார்ச்சர்  பண்ணினான்னு ...? ,                              நீ வேணா Tally இல்லனா GST-ERP சாப்ட்வேர்க்கு லைசென்ஸ் வாங்க ட்ரை பண்ணு , ட்ரைனிங் சென்டர் ஆரமி  அப்போ  நா பணம் தரேன் !.

இல்லப்பா , நா ஒரு நிலையான வேலைல இருக்கணும்னு உங்க பிரென்ட் சொல்லிட்டாரு .. இல்லனா பொண்ணு தரமாட்டாராம் !

சீனு உனக்கு வேவரிங் மைன்ட் ஜாஸ்தி டா , 12 ல பயோ குரூப் கேட்ட , கடைசில காமெர்ஸ் சேர்ந்த .. நீ  பி.காம் முடிச்ச காலேஜ்லயே வேலைக்கு  சேந்த SLET-NET எழுதபோறேன், ப்ரொபசர் ஆகபோறேன்னு சொன்ன ... அந்தவேளையும்விட்டுட்டு இப்போ ஐ.ஏ.எஸ் னு வந்து நிக்கற .

இல்ல பா , நா தெளிவாத்தான் இருக்கேன் காசு குடு இல்லாட்டி பைக்கை வித்துக்கறேன்.

எப்பா பெரிய மனுஷா உனக்கு இப்போ 25 அரை வயசு நினைப்பு வெச்சிகோ .. நாளையமறுநாள் காசு தரேன்.

தேங்க்ஸ் !


காட்சி- 5 ( வீடு )

சீனு எவளோ  சீரியசா படிக்கிறான் தெரியுமாங்க !?

அவன் புதுசா சிகரெட் பிடிக்க ஆரமிச்சுருக்கான் , அது தெரியுமா உனக்கு?!

அடபோங்க! , வேற வேலையே இல்ல உங்களுக்கு..


அப்பா-அம்மா நில்லுங்க என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க .

என்னடா ரிஜிஸ்டர் மேரேஜ் ஆஹ் ?

அப்பா இன்னிக்கு IAS ப்ரீலிமரி எக்ஸாம்ஸ்..

சரிப்பா போய்ட்டு வா .

நல்லா எழுதி கலெக்டர் ஆகணும் , பஸ்டு மார்க் வாங்கணும் 

தாங்க்ஸ் மா .

(சீனு  சென்ற பிறகு )

அவன் என்ன எக்ஸாம் எழுதப்போறன் , அதுக்கு எவ்ளோ போட்டி தெரியுமா ? உன்புள்ள படிச்சே நா பாக்கலேயே ..

அட போங்க , உள்ள தோச தீயுது .


காட்சி- 6 

3 ஆண்டுகளுக்கு பிறகு 


மேகா சீக்கிரம் வா , உனக்கு 9 மணிக்கு லாகின்.

இதோ வரேன்.

அங்கிள் உங்களுக்கும் , ஆன்டிக்கும் ஹாட் பாக்ஸ்ல டிபன் வெச்சுருக்கேன் , காபி பிளாஸ்க்ல இருக்கு.

ஓகே மேகா ஸீயூ.

ஆண்ட்டி தூங்கியேந்தப்பறம்  சொல்லுங்க 

ஓகே மா ..

அப்பா ... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ..

சொல்லு சீனு.

இந்த வேல எனக்குப்பிடிக்கல... , ரிசைன் பண்ணிட்டு பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன்.

அதான பாத்தேன் 1 1/2 வருஷமா ஒழுங்கா போறியேன்னு ..!

இல்லப்பா ...

பேசாத டா ...உன்ன ..

அப்பா ... கூல் சும்மா உங்கள வெறுப்பேத்தத்தான் சொன்னேன் ... பை ..

என்ன விளையாட்டு சீனு இது ..

அப்பாட்ட திட்டு வாங்கி ரொம்பநாள் ஆச்சுல்ல அதான்.


 வீட்டிலிருந்து  மேகாவை  அவளது அலுவலகத்தில் விட்டுவிட்டு ... நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் காரை நிறுத்திவிட்டு  இம்மிகிரேஷன் பிரிவில் சீனு நுழைய ..பலர் அவனனுக்கு வணக்கம் வைத்தனர் ) 

                                                          சுபம் 














































Saturday, 11 August 2018

படலம்

                                                           
                                                              படலம் 

    " யாரைப்பார்த்து பயங்கொள்ளிப்பல்லவன் என்கிறாய் ?  புள்ளூர் போர் பற்றி அறிந்திலையோ ! கழுகுக்குன்றத்தில் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிய சாளுக்கியரின் நிலை தெரியுமா ?
நீசனே , மற்றொரு வார்த்தை பேசு உன் சிரம்பால் ஆசை இல்லாவிடின் . வாதாபி.."

         " மித்ர பரஞ்ஜோதியாரே , கள யுத்தம் அறியாதவன் வாய்ச்சண்டையே போடுவான் . நாம் வால்வீச ஆயத்தமாவோம் "

            " உத்தரவு அரசே" !

  "கட் .. கட் .. கட் .. டேக் ஓகே , கிரேட் எக்ஸ்ப்ரசென்ஸ் "ரானோ"ஜி , மைன்ட் ப்லோவிங் டமில் பாஸ்கர் அண்ணா .

   ஒன்  அவர் பிரேக் , தென் சாங் ஷூட்டிங்" .

  "ரவி , ரெடியா இருங்க    ஐ  வில் பி பேக் இன் எ அவர்" .
  
     "கண்டிப்பாசார்"

   படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிறிதும் பதட்டமின்றி வெளியேறினார் பிரபல இயக்குனர் "குருநாத்" , தனது ஓய்வறைக்கு சென்று ஹாயாக அமர்ந்தார் .

          சிறிது நேரத்தில் அவரின் உதவியாளர் மணி ஓடோடி வந்து              "சார் , வாரப்பத்திரிக்கைலேந்து ஜீவா தம்பி வந்து காத்திருக்கு , உங்கள பேட்டி எடுக்கணுமாம் " 

     "சரிங்க மணி வரச்சொல்லுங்க "

     வாங்க ஜீவா சாப்டீங்களா ? 

     உங்க டெரெக்ஷன்ன பாத்ததுல பசியே மறந்து போச்சு சார் !

     திருநெல்வேலிக்கே அல்வா வா ? 

   அப்புடி இல்ல சார் , உண்மையைச்சொன்னேன் .

   ஓகே ஜீவா ஸ்டார்ட் யுவர் இன்டெர்வியூ , மீ டோன்ட் ஹாவ் மச் டைம்.

    எஸ் சார் ,  "வெல்க காஞ்சி" உங்க ஸ்டைல் டைட்டில் இல்லையே ?

    படமும் என்னுடைய பாணிக்கு மாறுபட்டதாகவே இருக்கும் .

      என்ன திடீர்னு "ஹிஸ்டாரிகால் பீரியட்" படம் ? 
   
    முடியும்னு தோணிச்சு , அதோட நம்ம தமிழாக வீர வரலாற்றை அசைபோட வெக்கணும்னும் .

      நீங்க மஹா சிக்கனவானாச்சே ? எப்புடி இவ்ளோ பெரிய பட்ஜெட் ?

    அது உங்கள மாதிரி ஆளுங்க கிளப்பி விட்ட புரூடா , நா எப்பவுமே தேவைக்கேத்த செலவு பண்ணிருக்கேன் , ஐ மீன் செலவு வெச்சுருக்கேன் .

    ரானோஜி - லேமா கெமிஸ்ட்ரி எப்புடி ?

   தே ஆர் டூயிங் குட் , நா கெமிக்கல் இன்ஜினீயர் இல்லையே மேனேஜ்மென்ட் கிராஜுவேட் .

    நடிகை லேமாக்கும் உங்களுக்கும் தகறாராமே ?

     அப்புடி எதுவும்மில ஆனா வராதுன்னு சொல்லமுடியாது .
  
   இந்தப்படம் தமிழ்ல மட்டும்தான் ரிலீசாம் ? , எப்பவும் டப் பண்ணி இந்தியா முழுக்க விடுவீங்களே ... ரீமேக் பண்ற ஐடியா இருக்கா ? 

   அடேங்கப்பா ! இவ்லோ தெரிஞ்சி வெச்சுருக்கீங்களே .. டப்பிங் பேர கெடுக்குது , கதயும் சேந்து கெடுது ., இது என்னுடைய சொந்த அனுபவத்துல கத்துக்கிட்டது . ஆஸ் ஆப் நௌ ரீமேக் , பார்ட்-2 னு எந்த பிளானும் இல்ல.

   எதுக்..

  ஜீவா போதும்  , ஷூட்டிங் ஸ்பாட்ல எடுத்த போட்டோஸ் தரேன் டீல் ஓகே வா ?

     நாட் ஓகே சார் , உங்க ஆட்டோகிராப்பும்  வேணும் .

     வித் பிளஷர் ஜீவா, தாங் யு பார் நாட் வேஸ்ட்டிங் மை டைம்.


   பேட்டியை முடித்துக்கொண்டு சிறிது இளைப்பாறிவிட்டு பாடல் படப்பிடிப்பை துவங்கினார் , "என் மனோ ரதம்" என்று மெல்லிய பெண் குரல் பாட இசையும் இணைந்துஅசத்த., நாயகிக்கு மட்டும் முகபாவம் வராமல் பல முறை எடுக்கப்பட்டு ஒரு வழியாக அன்றைய படப்பிடிப்பு முடிந்தது.

      வெள்ளை நிற போர்ட் ஐகானை தானே ஓட்டிகிண்டு "திவான் ராமா" சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்., மனைவி வரூணாவிடம் மனம்விட்டு பேசி , சிரித்துவிட்டு , லேசான டின்னர் சாப்பிட்டுவிட்டு வரவேற்பறையில் யாரையோ எதிர்பார்த்தபடி அமர்ந்தார்.

      "டிடிங்-டாங்" என்று அழைப்பு மணி ஒலித்தது..

 " எஸ் கம் இன்" என்றார் இன்முகதுடன், எழுத்தாளர் "ரெமோ" உள்ளே நுழைந்தார் , வரூணா காபியுடன் வந்து  " உங்க அடுத்த நாவல் என்ன ? எந்த தீம் ? வீட்ல எல்லாரும் சௌக்கியமா ? என்று கேள்விகளால் குடைந்து விட்டு , பதிலையும் பெற்ற பின்னர்  "ஓகே ஓகே இனிமே நீங்க பேசிக்கோங்க , நா அப்புறம் வரேன்" என்று நழுவினார்.

        சொல்லுங்க குருநாத் நா என்ன செய்யணும் ?

       நீங்க டைலாக்ஸ் எஸ்ட்டெண்ட் பண்ணித்தரணும் , உங்க ஸ்டைல் ல சொன்னா "வசன நீட்டிப்பு" வேணும் மிஸ்டர் "ரெ".

  அடப்பாவி , நானே ரெண்டு எழுத்துதான் வெச்சுருக்கேன் , அதையும் ஒண்ணா சுருக்கிட்டியே !

    சரி "மோ" , அதுவும் வேணாமா ரெங்குடு மோஹனசுந்தரம் ?

  வெச்சா குடுமி  அடிச்சா மொட்டை அப்பிடி தான் உன் வேல ! எடுத்தா பக்கா ஹை கிளாஸ் , இல்லாட்டி புராணம் .

    எஸ் "ரெமோ" ஐ ஜஸ்ட் நீட் இட் , எல்லாம் ஒரு தேடல் , புரிதல் , அறிதல் , எல்லாம் நீ சொல்லி குடுத்தது தான்.

    நா கிழிச்சேன் டா , ரெண்டு பேறும் ஒரே காலேஜ் , நீ எம்.பி.ஏ , நா எலக்ட்ரிகல் என்ஜினீயர் ...

      ம்ம் "ரெமோ" நா சும்மாவா  ரிட்டையர்டு கவர்மெண்ட் ஆபீசர் , பிரபல ரைட்டர் , "நடமாடும் விக்கிபீடியா" ,  வாழும் "கூகிள்"

   எப்பா சாமி , ஆளவிடு காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல பிடிச்ச இம்சை இன்னும் விட மாட்டேங்குது.

   இன்னிக்கு "ரெமோ" பிளாஷ் பாக் ல முழுகி போய்ட்டாரே , நம்ம கதையவே படமாக்குவோமோ ... நாமளே நடிப்போம் ?

   வேணாம் குரு , ஜனங்க பாவம் . எங்க எங்க வசன நீட்டிப்பு    வேணும் ?

     மகேந்திர பல்லவரின்  ஆலோசனைக்கூட்டம், சிற்பி ஆயனர் சிவகாமி டைலாக்ஸ் , மாமல்லரின் படை எழுச்சி வசனம்.

   " ரொம்ப பிடிச்சுருக்கு " னு எழுதி குடுத்தா ," பிடிச்சுருக்கு "னு சொல்லவெக்குற குரு ! எழுதிகொடுத்தது பத்தலைனு சொல்றாரா !

             ஆமாம் .

    குரு, தப்பா நினைக்காத நம்ம ஜனங்க இதையெல்லாம் பாப்பாங்களா ?

      இப்போ புதுசா போட்ட " மஹாபாரதம் " தான் டி.ஆர்.பி ல நம்பர் ஒன் , நல்ல விதமா குடுத்தா கண்டிப்பா மக்கள் ஏத்துப்பாங்க . ஐ ட்ரஸ்ட் மை பப்ளிக் .

    பாத்துப்பா , ஜெனங்களை நம்பி பல பேர் விழுந்துருக்காங்க , நாளைக்கே குடுத்துட்றேன் வசனத்தை நீட்டிச்சு.

    அதான் "ரெமோ" , சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்.

 
   மீண்டும் "டிடிங்-டாங்"  ஓசை கேட்டது .

    அட நம்ம "சப்த சூறாவளி" , இப்போதான்யா உன்னைப்பத்தி பேசிகிட்டு இருந்தோம்.,நீ வர வர  சரியாவே மியூசிக் போட்றதில்லனு, என்ன குரு ?

   நீங்க சொன்னா சரிதான் "எழுத்து வேந்தரே" , குரு சார் கூட சொல்ல வேண்டியில்ல .

   இந்த அடக்கம் தான்யா உன்கிட்ட பிடிச்சதே , இப்புடியே இரு தம்பி.நீங்க கேட்ட தேவார பாடலை குருகிட்ட கொடுத்துட்டேன் ரெபர் பண்ணிகோங்க. நா கிளம்புறேன் தம்பி , குரு வரேன்டா , குட்நைட்.

          " ஓகே ரெமோ , நல்லா தூங்கு"

           "குட் நைட் சார்".

       வாங்க  காயன் , டியூன் ரெடியா?

         ரெடி சார், இப்போவே கேக்கலாம்.

    வரூணா இங்க வா , புது பாட்டு மெட்டு ..
 
      இதோ வரேன் ....

 
      டியூன் இருவருக்கும் மிகவும் பிடித்தது , பின்னர் அதிகாலை மூன்று மணிவரை பாடல்,பின்னணிஇசை , இசை கோர்ப்பு , போன்ற பலவும் முடிவு செய்யப்பட்டது.

     வரூ ! நாங்க புனே ,ராஜஸ்தான் , பாட்னா , போறோம் ஈச் டுவெண்ட்டி டேஸ் ஷெடுல் . தென் போஸ்ட் புரொடக்ஷன் , கிராபிக்ஸ் மிக்ஸிங் .

       எப்பங்க படம் ரிலீஸ் ?

     திஸ் தீபாவளி ஐ திங்க் .

   இவ்ளோ அவசரமா இப்புடி ஒரு பெரிய ப்ரொஜெக்ட நீங்க டீல் பண்ணி நா பாத்ததேயில்லயே ? நானும் உங்க கூட வரத்தான் போறேன் .

       உன் இஷ்டம் வா , எஸ் பொண்டாட்டி ஐ நோ ஐயம் இன் ஹர்ரி ,பட் எனக்கு பிடிச்சுருக்கு பீலிங் குட் .

  இருவரும் புறப்பட்டனர் , படப்பிடிப்பு மிக வேகமாக நடந்தது , யாருக்கும் எந்த வசதி குறைபாடும் ஏற்படாமல் குரு நன்கு பார்த்துக்கொண்டார்.

     "வெல்க காஞ்சி" இது பல்லவப்பேரிகை என்ற சப் டைட்டில்ளுடன் "டீஸர்" , போஸ்டர் வெளியானது , "தீபாவளி" முதல் என்று,ஆடியோ வெளியிடப்பட்டு ஓரளவு ஹிட் ஆனது , "விசித்திர சித்தா" என்ற தீம் மியூசிக் பெரிய வரவேற்பை பெற்றது.

      ட்ரைலர்லும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

    தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாள் குருநாத் அளித்த பேட்டி பின்வருமாறு

" உங்கள் பேச்சை முதல் முறையாக நான் கேட்டுள்ளேன் , நீண்ட வசனங்கள் , தெளிவான காட்சி படுத்தல் , பிரகாசமான ஒளிப்பதிவு என அனைத்திலும் . உங்கள் "சப்த சூறாவளி" இசைவழியே உங்களை ஆறாம் நூற்றாண்டிற்கு இட்டு செல்ல இருக்கிறார். சமணர் நான் , நம் யாழ் , பறை , உடுக்கை , யுத்த முரசு என பல்வகை இசை விருந்து படைத்துள்ளார் .

   மோவீ  ஆர்ட் டெரெக்ஷன்யில் பின்னியுள்ளார் கோட்டை , அகழி , மற்றும் பல அதிசியங்கள் உங்களுக்கு காத்திருக்கிறது. ரானோஜி உங்களை பல்லவப்பேராசராகவே சந்திப்பார் , லேமா நடனத்தில் உங்களை கவர்வார் .

பிரேம் நாக நந்தியாகவே வந்து உங்களை மிரட்டுவார் , ஒளிப்பதிவாளர் சாஹில் , எடிட்டர் மனோ , துணை நடிகர்கள் , என்னுடைய அஸோஸியேட்ஸ் , தயாரிப்பாளர் , எல்லோருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

 இந்த மூவி நம்ம பண்டைய லைப் ஸ்டைல் , வீரம் , சமயம் , போன்றவற்றின் கருவூலம் , உங்களை நம்பியே இந்த பெரு முயற்சி..! பலன் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்"

  கிட்டத்தட்ட ஒருவருட உழைப்பு , உறக்கமற்ற சிந்தை , கற்பனைகளை காட்சி படுத்த ஏற்பட்ட தடை , அதையும் கடந்த முயற்சி , இடைவிடாத பயணம் , பல நூறு பேரின் கடின பங்களிப்பு , இவை அனைத்தும் கைகூடப்போகிறது என்கிற மன நிறைவு குருநாத்தை நிம்மதியாக தூங்க வைத்தது.

      ஆர , அமர காலையில் எழுந்து மிக நிதானமாகவே டிபன் சாப்பிட்டுவிட்டு , தன்னுடைய மொபைல் போனை எடுத்தார் , ஆறு மிஸ்டு கால் . ரெமோவிடமிருந்து ஒரு மெசேஜ் வழக்கமான " குட் மார்னிங்" அல்ல  " நம்ம படத்துமேல 3 கேஸ் பைல் ஆகியிருக்கு , ஒரு கேஸ் படத்துக்கு தடை கேக்குது" என்று படித்தவுடன் நொருங்கிபோனார் குருநாத்.

   மதியம் ரெமோவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார் , " மூணுல ரெண்டு கேஸ் டம்மி , நாம லீகலா அமரர் கல்கியோட பேமிலி கிட்ட கேட்டு அவர் கதையை தழுவிருக்கோம் , அத விளம்பரமும் பண்ணிருக்கோம் ஆனா ஒருத்தன் நான்தான் பல்லவர் வாரிசு , எங்கள் முன்னோர்களை கொச்சைப்படுத்தினதா நாங்க சந்தேகப்படறோம்னு சொல்லிருக்கான் அதான் தலைவலி"

     இத்தன.நாள் என்ன செஞ்சானாம் , கரெக்ட்டா ரிலீஸ் ஆறப்போ கேஸ் போடறான் ?

          அதான் குரு அவங்க கொள்கையே ! .

     நீங்க சொன்னமாதிரி புலிகேசியை "சத்யாச்சாரியா" வா மாத்திட்டேன் , சாளுக்கியர்களை  எதிரிகள்னு மாத்திட்டோம் ! பட் ஸ்டில் வீ ஆர்  இன் ட்ராப் !

       பாப்போம் குரு ஐ ட்ரை மை பெஸ்ட் .

     நமக்கு டைம்.இல்ல ரெ , த்ரீ டேஸ் பார் தீபாவளி !

   கரெக்ட் குரு , பரஞ்சோதி வாதாபி கணபதியை வேண்டடுன மாதிரி நாமளும் செய்யவேண்டிதான் .

       மறுநாள் மதியம் வரை எந்த முன்னற்றமும் இல்லை , தகவலும் இல்லை , ரெமோ , தயாரிப்பாளர் , பிலிம் சாம்பர் , சங்கங்கள் , போன்ற பலவித முயற்சிகளில் பலனில்லை .

   பிக் ஸ்டார் ரானோஜியும் முட்டி மோதி பாத்துவிட்டார் நோ யூஸ் ...

   வரூ மாக்ஸிமம் இன்னும் 3 படம் தான் பண்ணுவேன் , இப்போ இந்தப்படம் கிடப்பில் விழுந்தா அவ்ளோதான் . எம்மேல விழுந்த விமர்சனத்துக்கு இந்த படத்தால பதில் சொல்ல பாத்தேன் .. பட் நவ் பெட் அப் டியர் .... டூ  ஸ்கேர்ட் டூ

    அதெல்லாம் ஒண்ணுமில்ல குரு , தீபாவளி இல்லாட்டி ஒரு நான் பெஸ்டிவல் டே , வித் அவுட் மச் காம்பெடிஷன் .. கூல் டௌன் .. யுவர் போன் ரிங்கிங் .

           இப்போ யாரு ?

   தெரியல  சம் அன்நோன்  நம்பர் ..

   " குட் ஈவினிங் , குரு ஹியர்"

   " வணக்கம் , உங்கள பத்தி நிறையா கேள்விபட்டருக்கேன் , நீங்க கவலைப்படாதீங்க , அந்த கேஸ் வாபஸ் ஆயிரும்"

       நீங்க... ?

    ஐயம் ஹரி , உண்மையான பல்லவர் வாரிசு, காலிங் ப்ரம் இத்தாலி , படத்தோட வெற்றி விழால சந்திப்போம் , சிம்ம கொடிய பறக்க விடுவோம் , கம்பீரமா .. .

( குரு பிள்ளையாரை வேண்டினாரோ , இல்லையோ நமக்கு தெரியாது )