படலம்
" யாரைப்பார்த்து பயங்கொள்ளிப்பல்லவன் என்கிறாய் ? புள்ளூர் போர் பற்றி அறிந்திலையோ ! கழுகுக்குன்றத்தில் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடிய சாளுக்கியரின் நிலை தெரியுமா ?
நீசனே , மற்றொரு வார்த்தை பேசு உன் சிரம்பால் ஆசை இல்லாவிடின் . வாதாபி.."
" மித்ர பரஞ்ஜோதியாரே , கள யுத்தம் அறியாதவன் வாய்ச்சண்டையே போடுவான் . நாம் வால்வீச ஆயத்தமாவோம் "
" உத்தரவு அரசே" !
"கட் .. கட் .. கட் .. டேக் ஓகே , கிரேட் எக்ஸ்ப்ரசென்ஸ் "ரானோ"ஜி , மைன்ட் ப்லோவிங் டமில் பாஸ்கர் அண்ணா .
ஒன் அவர் பிரேக் , தென் சாங் ஷூட்டிங்" .
"ரவி , ரெடியா இருங்க ஐ வில் பி பேக் இன் எ அவர்" .
"கண்டிப்பாசார்"
படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிறிதும் பதட்டமின்றி வெளியேறினார் பிரபல இயக்குனர் "குருநாத்" , தனது ஓய்வறைக்கு சென்று ஹாயாக அமர்ந்தார் .
சிறிது நேரத்தில் அவரின் உதவியாளர் மணி ஓடோடி வந்து "சார் , வாரப்பத்திரிக்கைலேந்து ஜீவா தம்பி வந்து காத்திருக்கு , உங்கள பேட்டி எடுக்கணுமாம் "
"சரிங்க மணி வரச்சொல்லுங்க "
வாங்க ஜீவா சாப்டீங்களா ?
உங்க டெரெக்ஷன்ன பாத்ததுல பசியே மறந்து போச்சு சார் !
திருநெல்வேலிக்கே அல்வா வா ?
அப்புடி இல்ல சார் , உண்மையைச்சொன்னேன் .
ஓகே ஜீவா ஸ்டார்ட் யுவர் இன்டெர்வியூ , மீ டோன்ட் ஹாவ் மச் டைம்.
எஸ் சார் , "வெல்க காஞ்சி" உங்க ஸ்டைல் டைட்டில் இல்லையே ?
படமும் என்னுடைய பாணிக்கு மாறுபட்டதாகவே இருக்கும் .
என்ன திடீர்னு "ஹிஸ்டாரிகால் பீரியட்" படம் ?
முடியும்னு தோணிச்சு , அதோட நம்ம தமிழாக வீர வரலாற்றை அசைபோட வெக்கணும்னும் .
நீங்க மஹா சிக்கனவானாச்சே ? எப்புடி இவ்ளோ பெரிய பட்ஜெட் ?
அது உங்கள மாதிரி ஆளுங்க கிளப்பி விட்ட புரூடா , நா எப்பவுமே தேவைக்கேத்த செலவு பண்ணிருக்கேன் , ஐ மீன் செலவு வெச்சுருக்கேன் .
ரானோஜி - லேமா கெமிஸ்ட்ரி எப்புடி ?
தே ஆர் டூயிங் குட் , நா கெமிக்கல் இன்ஜினீயர் இல்லையே மேனேஜ்மென்ட் கிராஜுவேட் .
நடிகை லேமாக்கும் உங்களுக்கும் தகறாராமே ?
அப்புடி எதுவும்மில ஆனா வராதுன்னு சொல்லமுடியாது .
இந்தப்படம் தமிழ்ல மட்டும்தான் ரிலீசாம் ? , எப்பவும் டப் பண்ணி இந்தியா முழுக்க விடுவீங்களே ... ரீமேக் பண்ற ஐடியா இருக்கா ?
அடேங்கப்பா ! இவ்லோ தெரிஞ்சி வெச்சுருக்கீங்களே .. டப்பிங் பேர கெடுக்குது , கதயும் சேந்து கெடுது ., இது என்னுடைய சொந்த அனுபவத்துல கத்துக்கிட்டது . ஆஸ் ஆப் நௌ ரீமேக் , பார்ட்-2 னு எந்த பிளானும் இல்ல.
எதுக்..
ஜீவா போதும் , ஷூட்டிங் ஸ்பாட்ல எடுத்த போட்டோஸ் தரேன் டீல் ஓகே வா ?
நாட் ஓகே சார் , உங்க ஆட்டோகிராப்பும் வேணும் .
வித் பிளஷர் ஜீவா, தாங் யு பார் நாட் வேஸ்ட்டிங் மை டைம்.
பேட்டியை முடித்துக்கொண்டு சிறிது இளைப்பாறிவிட்டு பாடல் படப்பிடிப்பை துவங்கினார் , "என் மனோ ரதம்" என்று மெல்லிய பெண் குரல் பாட இசையும் இணைந்துஅசத்த., நாயகிக்கு மட்டும் முகபாவம் வராமல் பல முறை எடுக்கப்பட்டு ஒரு வழியாக அன்றைய படப்பிடிப்பு முடிந்தது.
வெள்ளை நிற போர்ட் ஐகானை தானே ஓட்டிகிண்டு "திவான் ராமா" சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்., மனைவி வரூணாவிடம் மனம்விட்டு பேசி , சிரித்துவிட்டு , லேசான டின்னர் சாப்பிட்டுவிட்டு வரவேற்பறையில் யாரையோ எதிர்பார்த்தபடி அமர்ந்தார்.
"டிடிங்-டாங்" என்று அழைப்பு மணி ஒலித்தது..
" எஸ் கம் இன்" என்றார் இன்முகதுடன், எழுத்தாளர் "ரெமோ" உள்ளே நுழைந்தார் , வரூணா காபியுடன் வந்து " உங்க அடுத்த நாவல் என்ன ? எந்த தீம் ? வீட்ல எல்லாரும் சௌக்கியமா ? என்று கேள்விகளால் குடைந்து விட்டு , பதிலையும் பெற்ற பின்னர் "ஓகே ஓகே இனிமே நீங்க பேசிக்கோங்க , நா அப்புறம் வரேன்" என்று நழுவினார்.
சொல்லுங்க குருநாத் நா என்ன செய்யணும் ?
நீங்க டைலாக்ஸ் எஸ்ட்டெண்ட் பண்ணித்தரணும் , உங்க ஸ்டைல் ல சொன்னா "வசன நீட்டிப்பு" வேணும் மிஸ்டர் "ரெ".
அடப்பாவி , நானே ரெண்டு எழுத்துதான் வெச்சுருக்கேன் , அதையும் ஒண்ணா சுருக்கிட்டியே !
சரி "மோ" , அதுவும் வேணாமா ரெங்குடு மோஹனசுந்தரம் ?
வெச்சா குடுமி அடிச்சா மொட்டை அப்பிடி தான் உன் வேல ! எடுத்தா பக்கா ஹை கிளாஸ் , இல்லாட்டி புராணம் .
எஸ் "ரெமோ" ஐ ஜஸ்ட் நீட் இட் , எல்லாம் ஒரு தேடல் , புரிதல் , அறிதல் , எல்லாம் நீ சொல்லி குடுத்தது தான்.
நா கிழிச்சேன் டா , ரெண்டு பேறும் ஒரே காலேஜ் , நீ எம்.பி.ஏ , நா எலக்ட்ரிகல் என்ஜினீயர் ...
ம்ம் "ரெமோ" நா சும்மாவா ரிட்டையர்டு கவர்மெண்ட் ஆபீசர் , பிரபல ரைட்டர் , "நடமாடும் விக்கிபீடியா" , வாழும் "கூகிள்"
எப்பா சாமி , ஆளவிடு காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல பிடிச்ச இம்சை இன்னும் விட மாட்டேங்குது.
இன்னிக்கு "ரெமோ" பிளாஷ் பாக் ல முழுகி போய்ட்டாரே , நம்ம கதையவே படமாக்குவோமோ ... நாமளே நடிப்போம் ?
வேணாம் குரு , ஜனங்க பாவம் . எங்க எங்க வசன நீட்டிப்பு வேணும் ?
மகேந்திர பல்லவரின் ஆலோசனைக்கூட்டம், சிற்பி ஆயனர் சிவகாமி டைலாக்ஸ் , மாமல்லரின் படை எழுச்சி வசனம்.
" ரொம்ப பிடிச்சுருக்கு " னு எழுதி குடுத்தா ," பிடிச்சுருக்கு "னு சொல்லவெக்குற குரு ! எழுதிகொடுத்தது பத்தலைனு சொல்றாரா !
ஆமாம் .
குரு, தப்பா நினைக்காத நம்ம ஜனங்க இதையெல்லாம் பாப்பாங்களா ?
இப்போ புதுசா போட்ட " மஹாபாரதம் " தான் டி.ஆர்.பி ல நம்பர் ஒன் , நல்ல விதமா குடுத்தா கண்டிப்பா மக்கள் ஏத்துப்பாங்க . ஐ ட்ரஸ்ட் மை பப்ளிக் .
பாத்துப்பா , ஜெனங்களை நம்பி பல பேர் விழுந்துருக்காங்க , நாளைக்கே குடுத்துட்றேன் வசனத்தை நீட்டிச்சு.
அதான் "ரெமோ" , சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்.
மீண்டும் "டிடிங்-டாங்" ஓசை கேட்டது .
அட நம்ம "சப்த சூறாவளி" , இப்போதான்யா உன்னைப்பத்தி பேசிகிட்டு இருந்தோம்.,நீ வர வர சரியாவே மியூசிக் போட்றதில்லனு, என்ன குரு ?
நீங்க சொன்னா சரிதான் "எழுத்து வேந்தரே" , குரு சார் கூட சொல்ல வேண்டியில்ல .
இந்த அடக்கம் தான்யா உன்கிட்ட பிடிச்சதே , இப்புடியே இரு தம்பி.நீங்க கேட்ட தேவார பாடலை குருகிட்ட கொடுத்துட்டேன் ரெபர் பண்ணிகோங்க. நா கிளம்புறேன் தம்பி , குரு வரேன்டா , குட்நைட்.
" ஓகே ரெமோ , நல்லா தூங்கு"
"குட் நைட் சார்".
வாங்க காயன் , டியூன் ரெடியா?
ரெடி சார், இப்போவே கேக்கலாம்.
வரூணா இங்க வா , புது பாட்டு மெட்டு ..
இதோ வரேன் ....
டியூன் இருவருக்கும் மிகவும் பிடித்தது , பின்னர் அதிகாலை மூன்று மணிவரை பாடல்,பின்னணிஇசை , இசை கோர்ப்பு , போன்ற பலவும் முடிவு செய்யப்பட்டது.
வரூ ! நாங்க புனே ,ராஜஸ்தான் , பாட்னா , போறோம் ஈச் டுவெண்ட்டி டேஸ் ஷெடுல் . தென் போஸ்ட் புரொடக்ஷன் , கிராபிக்ஸ் மிக்ஸிங் .
எப்பங்க படம் ரிலீஸ் ?
திஸ் தீபாவளி ஐ திங்க் .
இவ்ளோ அவசரமா இப்புடி ஒரு பெரிய ப்ரொஜெக்ட நீங்க டீல் பண்ணி நா பாத்ததேயில்லயே ? நானும் உங்க கூட வரத்தான் போறேன் .
உன் இஷ்டம் வா , எஸ் பொண்டாட்டி ஐ நோ ஐயம் இன் ஹர்ரி ,பட் எனக்கு பிடிச்சுருக்கு பீலிங் குட் .
இருவரும் புறப்பட்டனர் , படப்பிடிப்பு மிக வேகமாக நடந்தது , யாருக்கும் எந்த வசதி குறைபாடும் ஏற்படாமல் குரு நன்கு பார்த்துக்கொண்டார்.
"வெல்க காஞ்சி" இது பல்லவப்பேரிகை என்ற சப் டைட்டில்ளுடன் "டீஸர்" , போஸ்டர் வெளியானது , "தீபாவளி" முதல் என்று,ஆடியோ வெளியிடப்பட்டு ஓரளவு ஹிட் ஆனது , "விசித்திர சித்தா" என்ற தீம் மியூசிக் பெரிய வரவேற்பை பெற்றது.
ட்ரைலர்லும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னாள் குருநாத் அளித்த பேட்டி பின்வருமாறு
" உங்கள் பேச்சை முதல் முறையாக நான் கேட்டுள்ளேன் , நீண்ட வசனங்கள் , தெளிவான காட்சி படுத்தல் , பிரகாசமான ஒளிப்பதிவு என அனைத்திலும் . உங்கள் "சப்த சூறாவளி" இசைவழியே உங்களை ஆறாம் நூற்றாண்டிற்கு இட்டு செல்ல இருக்கிறார். சமணர் நான் , நம் யாழ் , பறை , உடுக்கை , யுத்த முரசு என பல்வகை இசை விருந்து படைத்துள்ளார் .
மோவீ ஆர்ட் டெரெக்ஷன்யில் பின்னியுள்ளார் கோட்டை , அகழி , மற்றும் பல அதிசியங்கள் உங்களுக்கு காத்திருக்கிறது. ரானோஜி உங்களை பல்லவப்பேராசராகவே சந்திப்பார் , லேமா நடனத்தில் உங்களை கவர்வார் .
பிரேம் நாக நந்தியாகவே வந்து உங்களை மிரட்டுவார் , ஒளிப்பதிவாளர் சாஹில் , எடிட்டர் மனோ , துணை நடிகர்கள் , என்னுடைய அஸோஸியேட்ஸ் , தயாரிப்பாளர் , எல்லோருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இந்த மூவி நம்ம பண்டைய லைப் ஸ்டைல் , வீரம் , சமயம் , போன்றவற்றின் கருவூலம் , உங்களை நம்பியே இந்த பெரு முயற்சி..! பலன் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்"
கிட்டத்தட்ட ஒருவருட உழைப்பு , உறக்கமற்ற சிந்தை , கற்பனைகளை காட்சி படுத்த ஏற்பட்ட தடை , அதையும் கடந்த முயற்சி , இடைவிடாத பயணம் , பல நூறு பேரின் கடின பங்களிப்பு , இவை அனைத்தும் கைகூடப்போகிறது என்கிற மன நிறைவு குருநாத்தை நிம்மதியாக தூங்க வைத்தது.
ஆர , அமர காலையில் எழுந்து மிக நிதானமாகவே டிபன் சாப்பிட்டுவிட்டு , தன்னுடைய மொபைல் போனை எடுத்தார் , ஆறு மிஸ்டு கால் . ரெமோவிடமிருந்து ஒரு மெசேஜ் வழக்கமான " குட் மார்னிங்" அல்ல " நம்ம படத்துமேல 3 கேஸ் பைல் ஆகியிருக்கு , ஒரு கேஸ் படத்துக்கு தடை கேக்குது" என்று படித்தவுடன் நொருங்கிபோனார் குருநாத்.
மதியம் ரெமோவுடன் தீவிர ஆலோசனை நடத்தினார் , " மூணுல ரெண்டு கேஸ் டம்மி , நாம லீகலா அமரர் கல்கியோட பேமிலி கிட்ட கேட்டு அவர் கதையை தழுவிருக்கோம் , அத விளம்பரமும் பண்ணிருக்கோம் ஆனா ஒருத்தன் நான்தான் பல்லவர் வாரிசு , எங்கள் முன்னோர்களை கொச்சைப்படுத்தினதா நாங்க சந்தேகப்படறோம்னு சொல்லிருக்கான் அதான் தலைவலி"
இத்தன.நாள் என்ன செஞ்சானாம் , கரெக்ட்டா ரிலீஸ் ஆறப்போ கேஸ் போடறான் ?
அதான் குரு அவங்க கொள்கையே ! .
நீங்க சொன்னமாதிரி புலிகேசியை "சத்யாச்சாரியா" வா மாத்திட்டேன் , சாளுக்கியர்களை எதிரிகள்னு மாத்திட்டோம் ! பட் ஸ்டில் வீ ஆர் இன் ட்ராப் !
பாப்போம் குரு ஐ ட்ரை மை பெஸ்ட் .
நமக்கு டைம்.இல்ல ரெ , த்ரீ டேஸ் பார் தீபாவளி !
கரெக்ட் குரு , பரஞ்சோதி வாதாபி கணபதியை வேண்டடுன மாதிரி நாமளும் செய்யவேண்டிதான் .
மறுநாள் மதியம் வரை எந்த முன்னற்றமும் இல்லை , தகவலும் இல்லை , ரெமோ , தயாரிப்பாளர் , பிலிம் சாம்பர் , சங்கங்கள் , போன்ற பலவித முயற்சிகளில் பலனில்லை .
பிக் ஸ்டார் ரானோஜியும் முட்டி மோதி பாத்துவிட்டார் நோ யூஸ் ...
வரூ மாக்ஸிமம் இன்னும் 3 படம் தான் பண்ணுவேன் , இப்போ இந்தப்படம் கிடப்பில் விழுந்தா அவ்ளோதான் . எம்மேல விழுந்த விமர்சனத்துக்கு இந்த படத்தால பதில் சொல்ல பாத்தேன் .. பட் நவ் பெட் அப் டியர் .... டூ ஸ்கேர்ட் டூ
அதெல்லாம் ஒண்ணுமில்ல குரு , தீபாவளி இல்லாட்டி ஒரு நான் பெஸ்டிவல் டே , வித் அவுட் மச் காம்பெடிஷன் .. கூல் டௌன் .. யுவர் போன் ரிங்கிங் .
இப்போ யாரு ?
தெரியல சம் அன்நோன் நம்பர் ..
" குட் ஈவினிங் , குரு ஹியர்"
" வணக்கம் , உங்கள பத்தி நிறையா கேள்விபட்டருக்கேன் , நீங்க கவலைப்படாதீங்க , அந்த கேஸ் வாபஸ் ஆயிரும்"
நீங்க... ?
ஐயம் ஹரி , உண்மையான பல்லவர் வாரிசு, காலிங் ப்ரம் இத்தாலி , படத்தோட வெற்றி விழால சந்திப்போம் , சிம்ம கொடிய பறக்க விடுவோம் , கம்பீரமா .. .
( குரு பிள்ளையாரை வேண்டினாரோ , இல்லையோ நமக்கு தெரியாது )

No comments:
Post a Comment