வினை
ஜே ஜே வென கூட்டம் , ஜன நடமாட்டம் ... ஓயாத அறிவிப்புகள் !
ஊர் வருவோர் , மீண்டும் செல்வோர் , திருமண கோஷ்டி , விளையாட்டு வீரர்கள் , கல்லூரி மாணவியர் , என பல்வேறு தரப்பட்ட மக்கள்.
பிரிவு, பரிவு , சோகம் , பிரியாவிடை , பட்டண பிரவேசம் என பலதரப்பட்ட உணர்ச்சிகளுடன் தாம்பரம் ரயில்நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது .
வெளியூரிலிருந்து சற்று தாமதமாய் வந்த ரயில் நிற்பதிற்கு முன்னே தடால் என குதித்தான் ஒருவன் பழைய ட்ரங்க்கு பெட்டியுடன் , நிலை தடுமாறி தடால் என விழுந்து எழுந்து வேட்டியை சரி செய்துகொண்டான்.
பழுப்பு நிற வேட்டி , பானையில் சுருட்டி வைத்த சட்டை , எண்ணெய் சொட்டும் முகம் , ஏடாகூட நடை , பெட்டி வேறு ! "அனகாபுத்தூர் எப்புடிங்க போவணும்?" என்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் கேட்டுவிட்டு ஒரு முடிவுக்கு வந்தவனாய் விறு விறு என வெளியேற முற்பட்டான் , அவனை டிக்கெட் பரிசோதகர் மடிக்கினார் !
வேட்டி, சட்டபை , பெட்டி என எங்கு தேடியும் டிக்கெட் கிடைக்கவில்லை... சட் என ஒரு புதிய 50 ருபாய் தாளை நீட்டினான் ! அவ்வளவு தான் கடும் கோவத்துடன் அவனை தர தர வென இழுத்து சென்று , படிக்கட்டுகளுக்கு பின்னால் அறையில் தள்ளினார் ! அங்கு வித்தவுட் டிக்கெட் , ட்ராக் கிராஸ்ஸிங் போன்ற முப்பதிற்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
நீ என்ன கேஸ் யா ? பெட்டி திருட்டா ? என்று சகலரும் அவனை கேள்வியால் தொலைத்து எடுக்க ... அவனோ சிரத்தையுடன் அலசி ஆராய்ந்து டிக்கெட் ஐ கண்டுபித்து நேரே அந்த அதிகாரியிடம் காமித்தான். என்ன உம் பேரு என்று கேட்டார் , அதான் டிக்கெட் காமிச்சாச்சு அப்புறம் என்ன பேரு , ஊருன்னுகிட்டு என்றான்.
கேட்டா சொல்லுயா!
கிராமத்தான்னா அவ்வளவு எகத்தாளம்... "சுரேசு" திருமயத்தான் என்று கூறிவிட்டு விருட்டு என வெளியே நடந்தான்.
பன்னிரண்டு மணி வெயில் மண்டையை பொளந்து தள்ளியது , ஒரு வழியாக விசாரித்து 66 நம்பர் பஸ்சில் ஏறி ஜன்னல் சீட்டை பிடித்தான் பெட்டியை பக்கத்து சீட்டில் வைத்துவிட்டு , கண்டக்டரிடம் 2 டிக்கெட் என்றபடி 50 ருபாயை நீட்டினான்.
மீதி 3 ரூவா ?
பரவால்ல , நீங்களே வெச்சுகோங்க .
யோவ் ! நீ தரணும் யா .
ஓஹ் டிக்கெட் வெல ஏறிட்டோ? .
அது ஏறி வருஷம் ஆச்சு.
தேடி தொழவி சில்லரையை கொடுத்தான் , பஸ்சை எடுப்பதாகவே தெரியவில்லை , கூட்டமும் தேறவில்லை ... பிரயாண களைப்பில் நன்றாக தூங்கிவிட்டான்.
சற்று நேரம் கழித்து ஒரு தடிமனான ஆசாமி அவனை உலுக்கி எழுப்பினான் " ஆளுங்க உக்காறவே எடம் இல்ல , பொட்டி கிட்டி வேற"
யோவ் ! அதுக்கும் சேத்துதான் டிக்கெட் வாங்கிருக்கு, நில்லு பேசாம.
பொட்டிய எடுக்கறியா , இல்ல தூக்கி வெளிய எரியட்டுமா ?
ஓ ! வெளிய எரிஞ்சுருவியா ? தொடுயா பாக்கலாம் , கைய வெச்சுபாருயா .
இப்படி இவர்கள் வார்த்தை தடிக்க , இருவர் பக்கமும் சார்பாக சில பேர் பேச பெரும் கூச்சல் குழப்பம் உண்டானது.கண்டக்டர் பெரிதாய் விசிலடித்து, சும்மா உக்காருங்கய்யா பூந்தமல்லியே வரப்போவுது என்று கத்த. அனைவரும் அமைதியாயினர்.
சுரேஷ் பூந்தமல்லியில் ஒருவழியாக இறங்கி வேட்டியை சரி செய்து கொண்டான் , சுத்தி முத்தி நோட்டமிட்டபடி சாலையை கடந்தான் எதிர்மார்கத்தில் வந்த பஸ்சில் ஏறினான்.
அவனருகே வந்த முதியவர் கரகரப்பான குரலில் மெதுவாய் " வர்ற ஸ்டாப்பிங் தான் கல்லறை" என்று கூறிவிட்டு நகர்ந்தார்.
அவனும் இறங்கினான் , ஒரு தெருவில் நடக்க தொடங்கி சாலை போகிறபடி வளைந்து , நெளிந்து நடந்தான் யாரையும் விசாரிக்கவும் இல்லை . ஒரு மூத்திரசாந்தில் நுழைந்து மீண்டும் நடக்க தொடங்கினான் . கிட்டத்தட்ட 20 நிமிடம் நடந்து கடந்து ஒரு மத்திய அரசாங்க கிடங்கை அடைந்தான். ஆள் அரவமே இல்லாத இடம் !
தனது பெட்டியை திறந்து அதில் உள்ள அழுக்கு துணிகளை களைத்து , மெதுவாக நோட்டமிட்டபடியே ஏதோ உதிரி பாகங்களை எடுத்து இணைக்க ஆரம்பித்தான்
அட "டைம் பாம்" !
பாமை முழுவதும் தயார் செய்து முடித்தான் , பொருத்துவதுதான் மிச்சம் .
பட் என ஒரு சத்தம்! சுரேஷின் தொடையில் இருந்து ரத்தம் வழிந்தது ...
அவன் பின்னால் இருவர் அவன் கைகளை மடக்கி பிடிக்க . " என்ன ஏ.ஜே.கே , போலாமா ?" என்றபடி துப்பாக்கி கையுடன் காவலர் சீருடையுடன் காட்சியளித்தார் பஸ்சில் பார்த்த அதே தடிமனான ஆசாமி.!
அவனை தர தர வென்று இழுத்து வந்தனர் , வரும் வழியில் பஸ்சில் இடம் சொன்ன கிழவர் நெற்றியில் குண்டடிபட்டு இறந்து கிடந்தார்.
அப்போது பரபரப்புடன் வந்த மற்றும் இரு அதிகாரிகள் , சார் இன்னொருத்தன் காலேஜ் பஸ்யயோ.இல்ல ஸ்கூல் பஸ் வெடிக்க வெக்க மனித வெடிகுண்டா பெங்களூரு ஹை வே ல பைக் ல போய்கிட்டுருக்கானாம்.
சரி கொஞ்ச நேரத்துக்கு ஸ்டுடென்ட்ஸ் பஸ்ச ஸ்டாப் பண்ணுங்க .
நமக்கு இப்போ தான் தகவல் கிடைச்சுது , அதுமட்டும் இல்லாம இது சீக்ரெட் ஆபரேஷன் பப்ளிக் பயப்படக்கூடாது.
ஆல்ரைட் , இன்போர்ம் அவர் டீம் டு ரஷ் இன் . நாம வேகமா போவோம் டிராபிக் இல்ல , வி ஷுட் ட்ரை அவர் பெஸ்ட்.
ஏ.ஜே.கே வுக்கும் நெற்றியில் துப்பாக்கியால் சிவப்பு பொட்டை வைத்துவிட்டு விரைந்தனர்.
அந்த மூணாவது ஆசாமி ஒரு பழுப்பு நிற பைக்கில் பறந்து கொண்டிருந்தான் , புயல் வேகத்தில் இவர்களும் துரத்த , எதிர் திசையிலும் அவனை மடக்க வீரர்கள் விரைய ... சரியாக இருதரப்பினருக்கும் 2 கிலோமீட்டர் இடைவெளியில் ஒரு கல்லூரி பேருந்தை நெருங்கி விட்டான் ...
பேருந்திற்கு பின்னால் ஒரே ஒரு பெரிய கண்டைனர் லாரி மட்டுமே அதை கடந்தால் ... பஸ் ப்ளாஸ்ட் !
அவன் புயல் வேகத்தில் கன்டைனரை கடக்க முற்பார்ட்டன் , ஒரு சிறிய பாலத்தில் வண்டி சென்று கொண்டிருந்தது , இன்னும் இரண்டு வீல் தான் பாக்கி ! லாரியை அணைத்து தாண்ட அவன் முற்பட்ட தருணத்தில் ... டமார் என்ற ஒரு பெரும் சத்தம் ! லாரி டயர் வெடித்தது அதுவும் அவன் சரியாய் அதற்கு நேரே வருகையில் .
அவன் நிலை தடுமாறி பாலத்திலிருந்து கீழே விழுந்து வெடித்து சிதறினான்...
"தேங்க் காட்" என்றபடி வீரர்கள் பெருமூச்சு விட்டனர் !
--- சா .ரா
No comments:
Post a Comment