நீர் ...
முப்பது வருசமாச்சு மெட்ராஸுக்கு பொழைக்க வந்து , என்னவோ நேத்து ரயிலேறி வந்தாப்ல இருக்கு ...
பதினஞ்சு வயசுல எழுத படிக்க தெரியாம , டீக்கட , மல்லியக்கடை , காய்கறி மார்க்கட்டு , ஹோட்டல்கட , லாட்டரிசீட்டு , இப்புடி அல்லாடி அலைஞ்சு திரிஞ்சு ஆறுமுகம் மேஸ்திரி கிட்ட எடு பிடி சித்தாளா சேந்தேன் .
அப்போதான் மெட்ராஸ்ல ஓட்டுவீடுலாம் கான்க்ரீட்டா மாற ஆரமிச்சுது எனக்கும் வேல இருந்துகிட்டே இருந்துச்சு , அப்பிடுயே தொழில கத்துக்க ஆரமிச்சேன் .
கொஞ்ச வருஷம் கழிச்சு தண்ணி பைப்பு ரிப்பேர் வேல , போர்வெல் வேலையும் கத்துக்கிட்டேன் , பத்து அடி தோண்டக்குள்ளேயே வெள்ளமா தண்ணி பாயும் ... வருஷம் போக போக கொஞ்சம் கொஞ்சமா என்னோட திறமைய வளத்துக்கிட்டேன் .
அதிக மரங்களோட , பறவை சத்தம் , பண்பான மக்கள் , பரபரப்பு இல்லாத ரோடு , அகலமான சாலைகள் , அப்புடிப்பட்ட அருமையான மெட்ராஸ் .. இனிமே என்னோட கற்பனைல மட்டுமே பாக்க முடியுற மெட்ராஸ் ...
மெட்ராஸ்க்கு சென்னைனு பேர மாத்துனதுலேந்து என்னோட வாழ்க்கையும் மாற ஆரமிச்சுட்டு, எக்கச்சக்க கூட்டு வீடுங்க , அரசாங்க கட்டிடங்க , தனிவீடுங்க , கடைங்க , கம்பெனிங்க .. நாள் தவறாம வருஷம்முழுக்க வேல .
குமரன் போர்வெல்ஸ்னு சொந்த ஸ்தாபனம் தொடங்கி நிறையா ஆர்டர் எடுத்தோம் , நிக்கக்கூட நேரமில்ல .
பொண்ண பேஷன் டேகினாலஜி படிக்க வெச்சு பெரிய எடத்துல கட்டிவெச்சேன், பெரியவன கம்ப்யூட்டர் படிக்க வெச்சு போன வருஷம் தான் கட்டிவெச்சேன் அவனும் கைநிறைய சம்பாதிக்குறான் , சின்னவன் தோட்டக்கலை சம்மந்தமா தான் படிப்பேன்னுடான் சரினு படிக்க வெச்சு அவனையும் " ஹாரி கல்ச்சரிஸ்ட்" ஆகிட்டேன் .
சின்னவன் என்னோட வேலையையும் பாதி பாத்துக்கிடறான் , அவனுக்கும் ஒரு நல்ல பொண்ண பாத்து கட்டிவெக்கணும்.
ஆண்டவன் புண்ணியத்துல காசு பணத்துக்கு பஞ்சமில்லை , ஆனா நம்ம ஊருக்கு இப்புடி ஒரு தண்ணித்தட்டுப்பாடு வரும்னு நெனச்சுக்கூடபாக்கல .. இப்போ தான் ஒரு சேவை அமைப்புல சேந்தேன் அவங்க சொல்லிதான் எனக்கு விசயம் புரிஞ்சுது ..
எப்போவுமே தமிழ்நாட்டு ஜெனத்துல 20 சதவிதம் இங்க தான் இருப்பாங்க , இத நா முப்பது வருசமா பாக்குறேன் .. ஏறி , குளம் , எல்லாம் பிளாட் வந்துட்டு இதுனாலதான் தண்ணி பஞ்சம்னு பரவலா சொல்லுறாங்க இப்போ தாம்பரம் , போரூர் , தாமஸ் மவுண்ட் , இப்புடி எல்லா எடத்துளியும் மஞ்சள்,சேப்புனு,பல கலர்ல தண்ணி.. !
சைதாப்பேட்டை , கிரோம்பேட்டை , அண்ணா நகர் , நுங்கம்பாக்கம் , பெரம்பூர் , இப்புடி எங்க பாத்தாலும் தண்ணி பஞ்சம் ... அடிக்கடி மோட்டர் அடிவாங்குது 100 அடியாதாண்டியும் நல்ல தண்ணி இல்ல.
நிறைய வீட்டு காரங்க மோட்டாரை போட்டுட்டு அப்புடியே விட்டுறாங்க .. நிறைய தண்ணி வீணாவும் கண்டுக்கவே மாட்டாங்க ! இதுக்காகவே பலபேர்கிட்ட சண்ட புடிச்சுருக்கேன் ஒரு பிரயோசமும் இல்ல தொண்ட தண்ணியும் செத்து வீணாச்சு.
இதுனாலயே நா ஆர்டர் எடுக்கிற வீட்டுக்கெல்லாம் இலவசமாவே ஆட்டோமாட்டிக் மோட்டார் போட்டு கொடுத்துக்கிட்டு வரேன் ..
சின்னவன் சொன்னான் ஒருவித கத்தாழை செடியை நட்டு வளத்தோம்னா நிலத்தடி தண்ணிய அப்புடியே வெச்சுக்கும்னு , என்னோட நிலத்துல வெச்சுருக்கேன் நெசம்னா அதையும் எங்க தொண்டு நிறுவனம் மூலமா செய்வேன் ..
என்னால இதான் முடியும் ... கொட்டி தீக்குற மழை தண்ணிய கடலுல கலக்காம தடுக்க , பல வடிகால் முறை செய்ய , நீர் நிலைகளை சரி செய்ய அதிகாரம் என்னாண்ட இல்லையே .
இருவது வருஷம் முன்னாடி ஒரு லிட்டர் தண்ணி முப்பது ரூவான எல்லாரும் கிலுக்குனு சிரிச்சிருப்போம் .. இப்போ டெல்லிக்கு காத்தே மில்லிகிராம் முன்னூறு ரூவானு விலைக்கு வந்துட்டு ...
சா.ரா

No comments:
Post a Comment