சுவை
சுஜா போலாமா ? , கேப் வந்தாச்சு. . சீக்கிரம்! நெடுநாள் கழித்து அத்திம்பேரை பார்க்கப்போகிறோம் :) அந்த குஷியில் பரபரத்தேன், சில தினங்களுக்கு முன்பு அத்தை, வைபவி அக்கா , சுபாஷினி, ஆகியோரை நரேஷ் கல்யாணத்தில் சந்தித்தோம். . அத்திம்பேர் ஆடிட்டிங்கால் வரவில்லை . ஏறக்குறைய ஒன்றரை வருடம் இருக்கும் அவரைப் பார்த்தே!
கேப் ஏறி OTP யை கூறிய கனம்முதல் அவருடைய இன்ப நினைவலைகள் ...
என்னைப் புரிந்து, தீரா பாசம் மற்றும் அக்கறை காட்டுவார்..
"திருகொலக்காவுல சைக்கிள் மிதித்தது போதும் மெட்ராஸ் வாங்கோ" என்று ஆணித்தரமாக கூறினார், அகையாலே தற்போது அடுத்த அன்னாநகரில் ... ஒரு முறை எனக்கு " டைபைட்" அறிகுறி தென்பட்டவுடேன தூக்கிக்கொன்டு ஆஸ்பத்திரியில் போட்டார் .. இப்படி எண்ணில் அடங்கா பல உதவிகள்! அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்று பலமுறை நினைத்துள்ளேன். ,ஒரு போன் கூட செய்ததில்லை. ..
நெற்றியில் விபூதி, கோல்டன் பிரேம் கண்ணாடி,கபடமற்ற சிரிப்பு,வெண்மை வேட்டி , இவையெல்லாம் அவரது முத்திரைகள் என்றாலும் *காபி* தான் அவரின் டிரேட்மார்க்.
மினுமினுக்கும் எவர்சில்வர் ஃப்ளாஸ்க் ,சிரிய பித்தளை டம்பளர், இவற்றை வைக்கேவ பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உறை, சில அலுவலக பைல்கள் , அவற்றை எல்லாம் வைக்க நவீன ஜோல்னப்பை,இவற்றுடன் டான் என்று 8 மணிக்கே தனது தனியார் அலுவலகத்திற்கு புறப்பட்டு விடுவார்.
சுங்கம் மற்றும் மதிப்புகூட்டு வரித்துறை அதிகாரி அவர் , தற்போது ஜி.எஸ்.டி யிலும் புலி ! , எப்பேர்ப்பட்ட இடியாப்ப சிக்கலையும் களையும் திறன் படைத்தவர், பல அரசாங்க அதிகாரிகளும் இவரிடம் துறை சார் உதவி கோருவர் , எனினும் சிபாரிசு என்று யாரிடம் நின்றதில்லை. . பலரும் அவரின் திறமையை ஏய்த்து பலன் பெறுவர், இதனாலேயே அத்தையிடம் "பிழைக்கத்தெரியாதமனுஷன்" என்ற அர்ச்சனை வாங்குவார் !
" முக்கால் ஸ்பூன் ஜீனி, மூன்றை ஸ்பூன் காபிப்பொடி, நல்லாதட்டினப்பரம் வெந்நீர நேரா ஊத்தாம, சுத்தினாப்ல விட்டோம்னா டிகாஷன் திடமா இறங்கும் அப்பரம் பால தண்ணிசேக்காம. .. " என்று டிகிரி காப்பி தயாரிக்கும் முறையை பாடமே எடுப்பார், தனது அலுவலக மேலாளர் முதற்கொன்டு , அவரது காபியை பகிர்வர்.
ஒரு முறை "எத்தியோப்பியா"விலிருந்து வந்திருந்த விற்பனைப்பிரிதி " காப்பியை கண்டுபிடித்த நாங்களே இவ்வளவு சுவையாக இதை பருகியதில்லை " என்று கூறி விட்டார்!
அவருடன் ஒருமுறை ரயிலில் பயணிக்கையில் காபி/டீ விற்றவறை உள்ளே அழைத்து தனது காபியை அளித்து அவரை பரவசப்படுத்தி " நீங்க விக்குறது காப்பின்னா, இது என்ன " என்று கேட்காமல் கேட்டார்.
பிறகு திருச்சி " பத்மா கபே, ஸ்ரீரங்கம் மீனாட்சி காபே, முரளீஸ் என்று எழுத்து வேந்தர் சுஜாதா குறிப்பிட்ட " அந்தன சாராயத்தின் " சாரத்தை உனரவைத்தார் !
" காரைக்குடி அண்ணப்பூரனா, மதுரை விசாலம் , ஆவனிமூலத்தெரு ஷண்முக விலாஸ், கும்பகோனம் வெங்கட்ராமா, சிதம்பரம் ரமேஷ் கபே , சென்னை ஹாட் சிப்ஸ், ரத்ணா காபே, பெங்களூரு ஹத்தி கபே ( ஜயா நகர் ) ஹைதராபாத் கோஸ்டா " இப்படி வாஷிங்டன் டி.சி வரை தனக்கென பிரத்யேகமான இடங்களில் " வெந்நீர விட்டு கழுவு , ஸ்ட்ராங்கா குடுப்பா " என்று கூறி சுவைப்பார் .
வைபவி அக்கா கல்யாணத்தில் "காபி" ஸ்டால் போட்டு சித்தப்பா மற்றும் என்னை போன்ற பலரை குதுகலப்படுத்தினார் .
ஒரு வழியாக 4 மணிக்கு கிளம்ய வண்டி நெரிசலில் ஊரி 6 மணி வாக்கில் திருமயிலையை அடைந்தது!
அத்தை அதே புன்னகையுடன் வரவேற்றார், இனிப்பு, காரத்துடன் அரட்டை அடித்தோம் .
7 மணியளவில் வந்தார் அத்திம்பேர், மிகுந்த மகிழ்ச்சி அடைந்து அவரும் உடை மாற்றி வந்து எங்களுடன் இணைந்தார்.." நான் காபி குடிக்கறத விட்டுட்டேன்" என்று பேரதிர்ச்சி அளித்தார் !
என்ன அத்திம்பேர் திடீர்னு?
தெய்வத்தின் குரல் படிச்சேன், பரமாச்சார்யாள் வருத்தப்படறா அதான். .
மிகவும் பழகிய, பிடித்தமான விஷயத்தை நினைத்த ஷனத்தில் கைவிட ஞானிகலாலேயே இயலும்!
எனக்கு 2 கப் டிகிரிக்காப்பி தேவைப்பட்டது அவர் தந்த அதிர்ச்சியிருந்து மீள!
*சா.ரா*
No comments:
Post a Comment